Recent Post

6/recent/ticker-posts

மாதிரி சிறைச்சாலைகள் சட்டம், 2023 / Model Prisons Act, 2023

TAMIL

  • தற்போதுள்ள ‘சிறைச்சாலை சட்டம், 1894’ சுதந்திரத்திற்கு முந்தைய காலத்தைய சட்டம் என்பதோடு, கிட்டத்தட்ட 130 ஆண்டுகள் பழமையானது. 
  • இந்தச் சட்டம் குற்றவாளிகளைக் காவலில் வைப்பதிலும், சிறைகளில் ஒழுங்கை அமல்படுத்துவதிலும் மட்டுமே கவனம் செலுத்துகிறது. 
  • தற்போதுள்ள சட்டத்தில் கைதிகளின் சீர்திருத்தம் மற்றும் மறுவாழ்வுக்கான எந்த ஏற்பாடும் இல்லை.
  • தற்போது சர்வதேச அளவில் சிறைகள் மற்றும் சிறைக் கைதிகள் பற்றிய கண்ணோட்டம் முற்றிலும் மாறியுள்ளது. சிறைச்சாலைகள் இன்று தண்டனைக்கான இடங்களாகக் கருதப்படுவதில்லை. 
  • மாறாக சிறைக்கைதிகளை சட்டத்தை மதிப்பவர்களாக மாற்றி மறுவாழ்வு அளிக்கப்படும் சீர்திருத்த நிறுவனங்களாகக் கருதப்படுகின்றன.
  • சிறை நிர்வாகம் மற்றும் கைதிகள் நிர்வாகத்தின் பொறுப்பு மாநில அரசுகளிடம் மட்டுமே உள்ளது. இருப்பினும், குற்றவியல் நீதி அமைப்பில் திறமையான சிறை நிர்வாகம் வகிக்கும் முக்கிய பங்கைக் கருத்தில் கொண்டு, இந்த விஷயத்தில் மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுக்கு உதவி செய்ய மத்திய அரசு அதிக முக்கியத்துவம் அளிக்கிறது. 
  • கடந்த சில ஆண்டுகளாக, மத்திய உள்துறை அமைச்சகம் தற்போதுள்ள சிறைச்சாலைச் சட்டத்தின் பல குறைகளை சுட்டிக்காட்டி வருகிறது.
  • பிரதமர் திரு.நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைமையின் கீழ், மத்திய உள்துறை அமைச்சர் திரு.அமித் ஷாவின் வழிகாட்டுதலின் கீழ், காலனியாதிக்கக் காலத்தின் காலாவதியான சிறைச்சாலைச் சட்டத்தை, தற்போதைய நவீன தேவைகளுக்கு ஏற்ப மறுஆய்வு செய்யவும், திருத்தவும் முடிவு எடுக்கப்பட்டது. 
  • இதனைத் தொடர்ந்து, சிறைச்சாலைகள் சட்டம் 1894-ஐ திருத்தும் பணியை போலீஸ் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பணியகத்திற்கு மத்திய உள்துறை அமைச்சகம் வழங்கியது.
  • இதனைத் தொடந்து உருவாக்கப்பட்ட வரைவில், சிறை நிர்வாகத்தில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துதல், பெண்கள்/திருநங்கைகளுக்கு சிறப்பு ஏற்பாடுகள் போன்றவற்றைச் செய்தல் உட்பட தற்போதுள்ள சிறைச்சாலைச் சட்டத்தில் உள்ள இடைவெளிகளை முழுமையாக நீக்கும் வகையிலான அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. 
  • மத்திய உள்துறை அமைச்சர் திரு.அமித் ஷாவின் வழிகாட்டுதலின் கீழ், உள்துறை அமைச்சகம் விரிவான 'மாதிரி சிறைச்சாலைகள் சட்டம், 2023' ஐ இறுதி செய்துள்ளது.

புதிய சிறைச்சாலைகள் சட்ட வரைவில் இடம்பெற்றுள்ள சில முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:

  • பெண் கைதிகள், திருநங்கைகள் போன்றோருக்கு தனித் தங்குமிடம் வழங்குதல்.
  • சிறை நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவரும் நோக்கில் சிறை நிர்வாகத்தில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கான ஏற்பாடு.
  • கைதிகள் மற்றும் சிறை ஊழியர்களுக்கு சிறைச்சாலைகளில் மொபைல் போன்கள் போன்றவற்றைப் பயன்படுத்தியதற்காக தண்டனை வழங்குதல்.
  • நன்னடத்தையை ஊக்குவிக்கும் வகையில் கைதிகளுக்கு சட்ட உதவி வழங்குதல், பரோல் மற்றும் முன்கூட்டியே விடுதலை போன்றவற்றை வழங்குதல்.
  • கைதிகளுக்கு தொழில் பயிற்சி, திறன் மேம்பாடு மற்றும் அவர்களை மீண்டும் சமூகத்தோடு ஒருங்கிணைத்தல் ஆகியவற்றில் கவனம் செலுத்துங்கள்.

ENGLISH

  • The present ‘Prisons Act, 1894’ is a pre-independence era Act and is almost 130 years old. The Act mainly focuses on keeping the criminals in custody and enforcement of discipline and order in prisons. There is no provision for reform and rehabilitation of prisoners in the existing Act.
  • In the last few decades, an altogether new perspective has evolved about prisons and prison inmates, globally. Prisons today are not looked as places of retributive deterrence but are considered as reformative and correctional institutions where the prisoners are transformed and rehabilitated back into society as law abiding citizens.
  • As per the provisions of Constitution of India, ‘prisons’/ ‘persons detained therein’ is a 'State' subject. The responsibility of prison management and prisoners administration solely vests with State Governments who alone are competent to make appropriate legislative provisions in this regard. 
  • However, given the critical role that efficient prison management plays in the criminal justice system, the Government of India attaches high degree of importance to supporting the States/UTs in this regard.
  • Over the past few years, the Ministry of Home Affairs (MHA) noted that there are several lacunae in the existing Prisons Act, which regulates the prison administration in all States and Union territories, with the exception of few States who have enacted a new Prisons Act. 
  • Besides the conspicuous omission of the correctional focus in the existing Act, a need was felt to revise and upgrade the Act in tune with modern day needs and requirements of prison management.
  • Under the visionary leadership of the Prime Minister Shri Narendra Modi and decisive guidance of the Union Home Minister Shri Amit Shah, a decision was taken to review and revise colonial-era outdated Prison Act, in tune with contemporary modern day needs and correctional ideology. 
  • The Ministry of Home Affairs assigned the task of revision of the Prisons Act, 1894 to the Bureau of Police Research and Development. The Bureau, after holding wide ranging discussions with State Prison authorities, correctional experts etc. prepared a draft.
  • With the objective of holistically providing guidance and addressing the gaps in the existing Prisons Act, including the use of technology in prison management, making provisions for grant of parole, furlough, remission to prisoners to encourage good conduct, special provision for women/ transgender inmates, physical and mental well-being of prisoners and focus on the reformation and rehabilitation of inmates, etc. the Ministry of Home Affairs, under the able guidance of Home Minister Shri Amit Shah, has finalised a comprehensive ‘Model Prisons Act, 2023’, which may serve as a guiding document for the States, and for adoption in their jurisdiction.
  • Along with ‘The Prisons Act, 1894’, ‘The Prisoners Act, 1900’ and ‘The Transfer of Prisoners Act, 1950’ have also been reviewed by the Ministry of Home Affairs and relevant provisions of these Acts have been assimilated in the ‘Model Prisons Act, 2023.’ 
  • State Governments and Union Territory Administrations can benefit from the Model Prisons Act, 2023 by adopting it in their jurisdictions, with such modifications which they may consider necessary, and repeal the existing three Acts in their jurisdictions.

Some salient features of the new Model Prisons Act are as follows:

  • Provision for security assessmentand segregation of prisoners, individual sentence planning,
  • Grievance redressal, prison development board, attitudinal change towards prisoners.
  • Provision of separate accommodation for women prisoners, transgender, etc.
  • Provision for use of technology in prison administration with a view to bring transparency in prison administration.
  • Provision for video conferencing with courts, scientific and technological interventions in prisons, etc.
  • Provision of punishment for prisoners and jail staff for use of prohibited items like mobile phones etc. in jails.
  • Provision regarding establishment and management of high security jail, open jail (open and semi open), etc.
  • Provision for protecting the society from the criminal activities of hardened criminals and habitual offenders, etc.
  • Provision for legal aid to prisoners, provision of parole, furlough and premature release etc. to incentivise good conduct.
  • Focus on vocational training and skill development of prisoners and their reintegration into the society.
  • Under the leadership of Prime Minister Shri Narendra Modi, the Government is committed to bring reforms in every sector and this decision of the Modi government will result in bringing more transparency and improvement in prison management and prisoners administration across the country.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel