விக்ராந்த் கப்பலில் இரவு நேரத்தில் மிக் 29கே போர் விமானம் இறங்கி வரலாற்று சாதனை / MiG 29K fighter jet landing at night on board Vikrant is a historic achievement
ராணுவ தளவாட உற்பத்தியில் நம் நாடு தன்னிறைவு பெற்று வரும் வேளையில், நம் கடற்படைக்காக ஐ.என்.எஸ்., விக்ராந்த் என்ற மிக பிரமாண்ட விமானம் தாங்கி போர் கப்பலை, பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆண்டு செப்., மாதம் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இந்த கப்பலின் வாயிலாக, 40 ஆயிரம் டன்னுக்கும் அதிகமான எடையை தாங்கக் கூடிய, விமானம் தாங்கி போர் கப்பல்களை தயாரிக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியா இணைந்தது.
மொத்தம் 23 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்ட ஐ.என்.எஸ்., விக்ராந்த் கப்பலில், வான்வழி மற்றும் கப்பல் வழி ஏவுகணை தாக்குதல்களை முறியடிக்கும் அதிநவீன வசதிகள் உள்ளன.
இதில் ஒரே நேரத்தில் 30 போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் நிறுத்த முடியும்.இந்த விமானம் தாங்கி கப்பலை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் போது, 'இது ஒரு மிதக்கும் நகரம்' என, பிரதமர் மோடி தெரிவித்திருந்தார்.
இந்த ஐ.என்.எஸ்., விக்ராந்த் விமானம் தாங்கி கப்பலில், பல்வேறு போர் விமானங்களை தரை இறக்கச் செய்யும் பயிற்சிகள் அவ்வப்போது நடந்து வருகின்றன.
இந்த வரிசையில், ரஷ்ய தயாரிப்பான, மிக் 29கே போர் விமானம் மற்றும் கடற்படைக்காக தயாரிக்கப்பட்ட இலகு ரக தேஜஸ் போர் விமானங்களை, ஐ.என்.எஸ்., விக்ராந்த் கப்பலில் நம் வீரர்கள் கடந்த பிப்., மாதம் தரை இறக்கினர்.
மேலும், இரவு நேரங்களில் போர் விமானங்கள் கப்பலில் இதுவரை தரை இறக்கப்பட்டது இல்லை.இந்நிலையில், விக்ராந்த் கப்பல் அரபிக்கடலில் பயணித்துக் கொண்டிருந்த போது, இரவு நேரத்தில் மிக் 29கே போர் விமானத்தை பைலட்கள் முதல்முறையாக தரை இறக்கினர்.
0 Comments