இந்திய கடற்படை - தாய்லாந்தின் ராயல் தாய் கடற்படையின் 35-வது கூட்டு ரோந்து நடவடிக்கை மே 3 -ம் தேதி முதல் 10-ம் தேதி வரை நடைபெற்றது.
இந்திய கடற்படை கப்பல் கேசரி உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட எல்எஸ்டி ரக கப்பல், தாய்லாந்து கடற்படை கப்பல் சைபூரி உள்ளிட்டவை அந்தமான் கடல்பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டன.
இந்தியப் பெருங்கடல் பகுதியில் சர்வதேச வர்த்தகத்திற்கு பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் 2005- ஆம் ஆண்டு முதல் இரு நாட்டு கடற்படைகளும் ஆண்டுக்கு இருமுறை கூட்டு ரோந்துப்பணியை மேற்கொள்கின்றன.
0 Comments