நெஞ்சக காசநோய் ஒருவரிடமிருந்து மற்றவருக்கு சளி, இருமல் மூலம் பரவக்கூடிய நோயாகும். எனவே, காசநோயாளிகள் இருக்கும் இல்லத்தில் அவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருக்கும் குடும்ப உறுப்பினர்களுக்கு முன்னெச்சரிக்கை மருந்து கொடுக்கும் 3HP எனும் சிகிச்சைத் திட்டம் தமிழகத்தில் தொடங்கப்பட்டுள்ளது.
சென்னை தனியார் ஓட்டலில் நடைபெற்ற காசநோய் ஒழிப்பு உச்சிமாநாட்டில் மருத்துவத்துறை அமைச்சர் மா சுப்ரமணியன் இதை தொடங்கி வைத்தார்.
இந்த காசநோய் சிலரில் சளி இருமல் என அறிகுறிகள் தென்படாவிட்டாலும், நோய் ஏற்படுத்தும் பாக்டீரியா உடலில் இருப்பது பரிசோதனைகள் மூலம் உறுதி செய்யப்பட்டது.
இதனால் காசநோயாளியின் வீடுகளில் இருக்கும் உறுப்பினர்களுக்கு இனி முன்னெச்சரிக்கை மருத்துவ சிகிச்சை மாநிலம் முழுவதும் வழங்கப்படுகிறது. 3HP எனப்படும் மருந்தை வாரத்துக்கு ஒரு முறை என மூன்று மாதங்களுக்கு ஒருவர் உட்கொள்ள வேண்டும்.
2019 ம் ஆண்டு 1,08,344 லட்சம் பேர், 2020ல் 68,922 பேர், 2021ம் ஆண்டு 82,680 பேர், 2022ம் ஆண்டு 91592 பேருக்கு காசநோய் கண்டறியப்பட்டது.
ஆறு மாத கால சிகிச்சைக்கு பிறகு காசநோயாளிகள் குணமடைந்து விடுவார்கள். 2019ல் 91,405 பேர், 2020ல் 57,391 பேர், 2021 68,810 பேர், 2022ல் 50,592 பேர் குணமாகி உள்ளனர்.
0 Comments