Recent Post

6/recent/ticker-posts

76வது உலக சுகாதார மாநாட்டில் காசநோய் (டிபி) குறித்த நிகழ்ச்சி / Program on Tuberculosis (TB) at the 76th World Health Assembly

  • மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர். மன்சுக் மாண்டவியா, ஜெனீவாவில் நடைபெற்று வரும் 76-வது உலக சுகாதார மாநாட்டின் போது, காசநோய் (டிபி) குறித்த நிகழ்வில் உரையாற்றினார். 
  • காசநோயால் ஏற்படும் சர்வதேச சுகாதார சவாலைச் சமாளிக்கும் வகையில், க்வாட் ப்ளஸ் நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகளும் இதில் பங்கேற்றனர்.
  • காசநோயைத் தடுப்பதற்கான இந்தியாவின் முயற்சிகளை விளக்கிய டாக்டர். மாண்டவியா, இந்த ஆண்டு, இந்தியாவில் உலக காசநோய் தினத்தை ஒட்டி மாநாடு நடைபெற்றதாகக் கூறினார். 
  • செப்டம்பரில் நடைபெறவுள்ள காசநோய் குறித்து வரவிருக்கும் ஐ.நா உயர்மட்டக் கூட்டத்தின் முக்கியத்துவத்தைக் குறிப்பிட்ட டாக்டர் மாண்டவியா, இது காசநோயை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான கூட்டு முயற்சி எனக் கூறினார்.
  • காசநோயைக் கட்டுப்படுத்துவதில் இந்தியாவின் இடைவிடாத முயற்சிகள் குறிப்பிடத்தக்க விளைவுகளைத் தந்துள்ளதாக டாக்டர் மாண்டவியா கூறினார். 
  • 2015 முதல் 2022 வரை நாட்டில் காசநோய் பாதிப்பு 13% குறைந்துள்ளதாகவும், இது சர்வதேச குறைப்பு விகிதமான 10%-தை விட அதிகம் எனவும் அவர் கூறினார். 
  • இதே காலகட்டத்தில் இந்தியாவில் காசநோய் இறப்பு விகிதம் 15% குறைந்துள்ளதாகவும், சர்வதேச விகிதம் 5.9% எனவும் டாக்டர் மாண்டவியா கூறினார்.
  • காசநோய்க்கு எதிரான போராட்டத்தில் தடுப்பூசியை உருவாக்குவதன் அவசியத்தை டாக்டர் மாண்டவியா சுட்டிக் காட்டினார். 2030-ம் ஆண்டுக்குள் காசநோயை உலகிலிருந்து அகற்ற முடியும் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தி டாக்டர் மாண்டவியா தனது உரையை நிறைவு செய்தார்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel