மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா 76-வது உலக சுகாதார மாநாட்டில் உரையாற்றினார் /Union Health Minister Mr Mansukh Mandavia addressed the 76th World Health Conference
மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா, சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனிவாவில் நடைபெறும் 76-வது உலக சுகாதார மாநாட்டில் உரையாற்றினார்.
உலக சுகாதார அமைப்பின் தலைமை இயக்குநர் திரு டெட்ரோஸ் அதானம் மற்றும் பல்வேறு நாடுகளின் சுகாதார அமைச்சர்கள் இதில் பங்கேற்றனர்.
அனைவருக்கும் சுகாதாரம் என்ற கருப்பொருளில் நடைபெறும் இந்த மாநாட்டில் உரையாற்றிய திரு மன்சுக் மாண்டவியா, சுகாதார அவசர நிலைகளுக்கு இந்தியா, தயாராக உள்ளது என்றும், சுகாதார சேவைகளுக்கு இந்தியா முன்னுரிமை அளிப்பதாகவும் கூறினார்.
இந்த மாநாட்டில் ‘இந்தியாவில் சிகிச்சை, இந்தியா வழங்கும் சிகிச்சை’என்ற தலைப்பில் நடைபெற்ற மற்றொரு அமர்வில் உரையாற்றிய திரு மன்சுக் மாண்டவியா, இந்த தலைப்பு ஒரே பூமி, ஒரே சுகாதாரம் என்ற இந்தியாவின் தொலைநோக்குப் பார்வையை அடிப்படையாகக் கொண்டது என்று தெரிவித்தார்.
மிகவும் பழைமையான மருத்துவமுறையான ஆயுர்வேதத்தின் தாயகமாக இந்தியா திகழ்கிறது என்று அவர் குறிப்பிட்டார். ஆயுஷ் மருத்துவ முறைகளுக்கான தேவை உலகெங்கிலும் தொடர்ந்து அதிகரித்து வருவதாக அவர் கூறினார்.
0 Comments