2023 மே 27-ம் தேதியன்று, புது தில்லியின் பிரகதி மைதானத்தில் உள்ள புதிய மாநாட்டு மையத்தில், ‘மேம்பட்ட இந்தியா @ 2047: ஒன்றுபட்ட இந்தியாவின் பங்கு' என்ற கருப்பொருளில் நிதி ஆயோக்கின் 8-வது ஆட்சிக்குழு கூட்டம் நடைபெறவுள்ளது.
இந்தக் கூட்டத்தின்போது, (i) மேம்பட்ட இந்தியா @ 2047, (ii) எம்எஸ்எம்இக்களின் வளர்ச்சி, (iii) உள்கட்டமைப்பு மற்றும் முதலீடுகள், (iv) இணக்கங்களைக் குறைத்தல், (v) பெண்களுக்கு அதிகாரமளித்தல், (vi) திறன் மேம்பாடு (viii) வட்டார வளர்ச்சி ஆகிய எட்டு தலைப்புகளில் நாள் முழுவதும் விவாதிக்கப்படும்.
இக்கூட்டத்தில் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் முதலமைச்சர்கள் பங்கேற்கவுள்ளனர். நிதி ஆயோக் தலைவர் என்ற முறையில், பிரதமர் இக்கூட்டத்திற்கு தலைமை தாங்குவார்.
உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரம் மற்றும் அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக, இந்தியா அடுத்த 25 ஆண்டுகளில் விரைவான வளர்ச்சியை அடையக்கூடிய பொருளாதார வளர்ச்சிப் பாதையில் உள்ளது.
இந்தியாவின் வளர்ச்சி மாநிலங்களின் வளர்ச்சியுடன் நெருக்கமாகப் பிணைந்துள்ளது. இந்த 8-வது ஆட்சிக்குழு கூட்டம், மத்திய-மாநில அரசுகளின் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கும், 2047-ம் ஆண்டில் மேம்பட்ட இந்தியா என்ற இலக்கை அடைவதற்கான ஒற்றுமையை உருவாக்குவதற்கும் தளத்தை வழங்கும்.
ENGLISH
The 8th Governing Council meeting of NITI Aayog will be held on 27th May 2023 at the New Convention Center at Pragati Maidan, New Delhi on the theme 'Better India @ 2047: Role of a United India'.
During this meeting, the day will focus on eight topics: (i) Improved India @ 2047, (ii) Development of MSMEs, (iii) Infrastructure and Investments, (iv) Reducing Conformities, (v) Empowering Women, (vi) Skill Development (viii) Community Development. will be discussed throughout.
Chief ministers of all states and union territories will participate in this meeting. The Prime Minister, as Chairman of the Niti Aayog, will preside over the meeting.
As the world's fifth largest economy and most populous country, India is on an economic growth trajectory that is likely to achieve rapid growth over the next 25 years.
India's development is closely linked with the development of states. This 8th Cabinet meeting will provide a platform to strengthen Central-State Government cooperation and build unity towards achieving the goal of a developed India by 2047.
0 Comments