சென்னை உயர் நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக எஸ்.வைத்தியநாதன் நியமனம் - குடியரசுத் தலைவர் உத்தரவு / Appointment of S. Vaithyanathan as the Chief Justice of Madras High Court - President's Order
சென்னை உயர் நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக பதவி வகித்த டி.ராஜா ஓய்வுபெற்றார். இதையடுத்து, புதிய பொறுப்பு தலைமை நீதிபதியாக எஸ்.வைத்தியநாதனை நியமித்து குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உத்தரவிட்டுள்ளார்.
பொறுப்பு தலைமை நீதிபதியாக எஸ்.வைத்தியநாதன் மே 25 முதல் தனது பணிகளை மேற்கொள்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நீதிபதி எஸ்.வைத்தியநாதன் கடந்த 2013-ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டு, கடந்த 2015-ம் ஆண்டு நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments