ஆஃப்-தி-ஷெல்ஃப் கூறுகளிலிருந்து உருவாக்கப்பட்ட புதிய குறைந்த விலை நட்சத்திர சென்சாரின் முதல் சோதனை / First test of a new low-cost star sensor built from off-the-shelf components
வானியலாளர்களால் உருவாக்கப்பட்ட குறைந்த விலை நட்சத்திர சென்சார் சமீபத்தில் இஸ்ரோவால் பிஎஸ்எல்வி சி-55 இல் ஏவப்பட்டது.
அதன் முதல் விண்வெளி சோதனையில், பிஎஸ்எல்வி சுற்றுவட்ட சோதனைப் பகுதியில் (POEM) பொருத்தப்பட்ட இந்த சென்சார் சிறப்பாக செயல்படுகிறது.
செயற்கைக்கோள் எங்கு சுட்டிக்காட்டுகிறது என்பதை விரைவாகக் கணக்கிட வடிவமைக்கப்பட்ட இந்த குறைந்த விலை சென்சார் முதல் முறையாக விண்வெளியில் சோதிக்கப்படுகிறது.
எந்தவொரு விண்வெளிப் பயணத்திற்கும், எந்த நேரத்தில் செயற்கைக்கோள் எங்கு சுட்டிக்காட்டுகிறது என்பதை அறிவது முக்கியம். இதனை அறிய பல வழிகள் இருந்தாலும், இந்த நட்சத்திர சென்சார் மிகத் துல்லியமான தகவலை வழங்குகிறது.
விண்வெளியில் இதன் செயல்திறனை மதிப்பிடுவது பிரதான நோக்கமாக இருந்த நிலையில், ஹோசகோட்டிலுள்ள இந்திய வானியற்பியல் கழகத்தின் CREST வளாகத்தில் அமைந்துள்ள விண்வெளி அறிவியலுக்கான எம்ஜிகே மேனன் ஆய்வகத்தில் அதற்கான சோதனைகள் செய்யப்பட்டன.
0 Comments