Recent Post

6/recent/ticker-posts

ஐ.ஐ.டி வளாகத்தில் நீர் தொழில்நுட்ப மையம் இந்தியா - இஸ்ரேல் ஒப்பந்தம் / India-Israel Agreement on Water Technology Center at IIT Campus!

TAMIL

  • இந்திய மற்றும் இஸ்ரேலிய அரசாங்கங்களின் கூட்டு முயற்சியின் விளைவாக, சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழக வளாகத்தில் `இந்தியா-இஸ்ரேல் நீர் தொழில்நுட்ப மையம்' (CoWT) அமைக்கப்படவுள்ளது.
  • மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற அமைச்சகம் இந்தப் புதிய வசதியை நிறுவுவதற்கு இஸ்ரேலின் சர்வதேச வளர்ச்சி ஒத்துழைப்புக்கான ஏஜென்சியான MASHAV உடன் இணைந்து செயல்படவுள்ளது. 
  • இந்த மையத்தின் முக்கிய நோக்கம், இந்தியத் தேவைகளுக்காக இஸ்ரேலின் சிறந்த தொழில்நுட்பங்களை செயல்படுத்துவதை உறுதி செய்வதும், இந்திய நீர்த் துறைக்கான நிலையான மேலாண்மை தீர்வுகளில் பணியாற்றுவதும் ஆகும்.
  • இந்த மாத தொடக்கத்தில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெயசங்கர் மற்றும் இஸ்ரேல் வெளியுறவுத்துறை அமைச்சர் ஏலி கோஹன் ஆகியோர் முன்னிலையில், இது தொடர்பான விருப்பக் கடிதத்தில் இந்திய அரசின் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகத்தின் (MoHUA) செயலர் மனோஜ் ஜோஷி, ஐஐடி மெட்ராஸின் இயக்குநர் பேராசிரியர் வி.காமகோட்டி மற்றும் இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் நவோர் கிலோன் ஆகியோர் கையெழுத்திட்டனர்.

ENGLISH

  • As a result of joint efforts by the Governments of India and Israel, the ``India-Israel Center for Water Technology'' (CoWT) will be set up on the Indian Institute of Technology campus in Chennai.
  • The Federal Ministry of Housing and Urban Affairs will work with MASHAV, Israel's agency for international development cooperation, to establish the new facility.
  • The main objective of the center is to ensure the implementation of the best of Israel's technologies for Indian needs and to work on sustainable management solutions for the Indian water sector.
  • Earlier this month, in the presence of Indian Foreign Minister Jayashankar and Israeli Foreign Minister Eli Cohen, the MoHUA Secretary Manoj Joshi, IIT Madras Director Professor V. Kamakoti and Israeli Ambassador to India Navor Kilon signed the Letter of Intent in this regard.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel