சர்வதேச அருங்காட்சியக தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட கண்காட்சியையும் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். டெல்லி பிரகதி மைதானத்தில் 2 நாட்கள் நடைபெறும் இந்தக் கண்காட்சியில் 1,200 அருங்காட்சியகங்கள் பங்கேற்றுள்ளன.
மேலும், டெல்லி கடமை பாதை பாக்கெட் வரைபடத்தையும் பிரதமர் வெளியிட்டார். முன்பு ராஜபாதை என்று அழைக்கப்பட்ட இந்தப் பகுதி, தற்போது கடமை பாதை என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது
ரெய்சினா ஹில் வளாகம் முதல் இந்தியா கேட் வரையிலான கடமை பாதை வழித்தடத்தில் அமைந்துள்ள அரசுக் கட்டிடங்கள், வரலாற்றுச் சிறப்புமிக்க கலாச்சார நிறுவனங்கள் குறித்த விவரங்கள் இந்த வரைபடத்தில் இடம் பெற்றுள்ளன.
0 Comments