நம் நாட்டின் ரயில்வே துறையை நவீனப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள மத்திய அரசு, 2019ல் அதிவேகமாக செல்லக் கூடிய வந்தே பாரத் ரயிலை அறிமுகப்படுத்தியது.
இதுவரை 17 வந்தே பாரத் ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், 18வது ரயில் சேவை நேற்று துவக்கப்பட்டது. வட கிழக்கு மாநிலமான அசாமின் குவஹாத்தி நகரிலிருந்து, மேற்கு வங்கத்தில் உள்ள நியூ ஜல்பைகுரி வரையிலான இந்த ரயில் சேவையை 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக பிரதமர் மோடி கொடியசைத்து துவக்கி வைத்தார்.
குவஹாத்தி ரயில் நிலையத்தில் நடந்த இந்நிகழ்ச்சியில் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், அசாம் கவர்னர் குலாப் சந்த் கட்டாரியா, முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
0 Comments