மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம், ரைட்ஸ் நிறுவனம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் / MoU between Union Ministry of Housing and Urban Affairs, Rights Institute
ஒரு லட்சத்திற்கும் குறைவான மக்கள் தொகை உள்ள நகரங்களுக்கு நிதி உதவி அளிப்பதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட பயன்படுத்தப்பட்ட நீர் மேலாண்மைத் திட்டம், நகர்ப்புறங்களின் துப்புரவு துறையில் மிகப்பெரிய மாற்றத்திற்கு வித்திட்டுள்ளது.
திடக்கழிவு மற்றும் பயன்படுத்தப்பட்ட நீர் மேலாண்மையை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துவதற்காக மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம், ரைட்ஸ் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
இந்த ஒப்பந்தத்தின்படி ரைட்ஸ் நிறுவனத்தின் தொழில்நுட்ப ஆதரவு பிரிவு, நகர்ப்புற தூய்மை இந்தியா திட்டத்திற்கு மூன்று ஆண்டு காலம் தொழில்நுட்ப உதவி வழங்கும்.
கழிவுநீர் மேலாண்மை, கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலைகளின் பொறியியல் மற்றும் வடிவமைப்பு நடைமுறை உள்ளிட்ட துறைகளில் ஆதரவு அளிக்கப்படும்.
இரண்டாவது கட்ட நகர்ப்புற தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கழிவுகளற்ற நகரங்களை உருவாக்கும் தொலைநோக்குப் பார்வையோடு நிலையான திடக்கழிவு மேலாண்மையை வலுப்படுத்த கவனம் செலுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
ENGLISH
The Used Water Management Scheme, introduced to provide financial assistance to cities with a population of less than one lakh, has ushered in a huge change in the sanitation sector in urban areas.
The Union Ministry of Housing and Urban Affairs has signed an MoU with Wrights to focus on improving solid waste and used water management.
According to the agreement, the Technical Support Division of Rites will provide technical assistance to the Urban Clean India Project for a period of three years.
Support will be provided in areas including wastewater management, engineering and design practice of wastewater treatment plants.
It is noteworthy that under the second phase of the Urban Clean India Plan, the focus is on strengthening sustainable solid waste management with a vision of creating waste-free cities.
0 Comments