'விஜிலன்ஸ் கமிஷன்' எனப்படும் மத்திய ஊழல் தடுப்பு ஆணையம், லஞ்சம், ஊழலுக்கு எதிராக செயல்படும் தன்னாட்சி அமைப்பாகும். இதன் கண்காணிப்பு ஆணையராக செயல்பட்டு வந்த சுரேஷ் என்.பட்டேலின் பதவிக் காலம் கடந்த டிசம்பரில் முடிந்தது.
இதையடுத்து, பொறுப்பு ஆணையரக பிரவீன்குமார் ஸ்ரீவஸ்தவா பதவி வகித்து வந்தார். இந்நிலையில் ஊழல் தடுப்பு ஆணையத்தின் புதிய தலைவராக இவர் பொறுப்பேற்றார்.
புதுடில்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில், ஜனாதிபதி திரவுபதி முர்மு இவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
0 Comments