டேராடூனில் இருந்து தில்லிக்கு வந்தே பாரத் விரைவு ரயிலை பிரதமர் கொடியசைத்து தொடங்கிவைத்தார் / The Prime Minister flagged off the Vande Bharat Express train from Dehradun to Delhi
டேராடூனில் இருந்து தில்லிக்கு இயக்கப்படும் வந்தே பாரத் விரைவு ரயிலின் தொடக்க சேவையைப் பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலிக் காட்சி மூலம் கொடியசைத்து தொடங்கி வைத்து தேசத்திற்கு அர்ப்பணித்தார்.
உத்தராகண்ட்டில் புதிதாக மின்மயமாக்கப்பட்ட ரயில் வழித்தடங்களை நாட்டுக்கு அர்ப்பணித்து அந்த மாநிலத்தை 100 சதவீத மின்மயமாக்கப்பட்ட ரயில் வழித்தடங்கள் கொண்ட மாநிலமாக அவர் அறிவித்தார்.
இது உத்தராகண்ட் மாநிலத்தில் அறிமுகம் செய்யப்படும் முதலாவது வந்தே பாரத் ரயில் சேவையாகும். உலகத் தரத்திலான வசதிகளுடன் சிறப்பான பயண அனுபவத்தை இந்த ரயில் வழங்கும்.
குறிப்பாக, அம்மாநிலத்திற்கு சுற்றுலா செல்வோருக்கு இந்த ரயில் மிகவும் பயனுள்ளதாக அமையும். உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட இந்த ரயில், கவாச் தொழில் நுட்பம் உள்ளிட்ட மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்களை கொண்டுள்ளது.
0 Comments