முன்னேற்றத்துக்கான இந்திய –பசிபிக் பொருளாதார கட்டமைப்பின் இரண்டாவது அமைச்சர்கள் அளவிலான கூட்டம் / Second Ministerial Meeting on Indo-Pacific Economic Framework for Development
முன்னேற்றத்துக்கான இந்திய –பசிபிக் பொருளாதார கட்டமைப்பின் இரண்டாவது அமைச்சர்கள் அளவிலான கூட்டம் அமெரிக்காவின் டெட்ராய்ட் நகரில் நடைபெற்றது.
மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை, நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகம் மற்றும் ஜவுளித்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் காணொலி மூலம் இக்கூட்டத்தில் பங்கேற்றார்.
டோக்கியோவில், அமெரிக்கா மற்றும் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தின் மற்ற கூட்டாளர் நாடுகளால் ஐபிஇஎப் கடந்த ஆண்டு மே 23 அன்று கூட்டாக தொடங்கப்பட்டது.
ஆஸ்திரேலியா, புருனே, பிஜி, இந்தியா, இந்தோனேசியா, ஜப்பான், கொரியா குடியரசு, மலேசியா, நியூசிலாந்து, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து, வியட்நாம், அமெரிக்கா ஆகிய 14 நாடுகளை ஐபிஇஎப் கொண்டுள்ளது.
பிராந்தியத்தில் வளர்ச்சி, அமைதி மற்றும் செழிப்பு ஆகியவற்றை முன்னேற்றும் குறிக்கோளுடன் கூட்டாளர் நாடுகளிடையே பொருளாதார ஈடுபாட்டை வலுப்படுத்த முயல்கிறது.
0 Comments