Recent Post

6/recent/ticker-posts

தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் பல்கலைக்கழகத்திற்கு புதிய துணைவேந்தர் நியமனம் / Tamil Nadu Dr. MGR University appoints new Vice-Chancellor

  • தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக இருந்த சுதா சேஷய்யனின் பதவி காலம் டிசம்பர் 2021 உடன் முடிந்தது. 
  • அவரது பதவி காலம் மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டு, 2022 டிசம்பரில் அவர் ஓய்வு பெற்றார். இதையடுத்து துணைவேந்தர் பதவி காலியாக இருந்த நிலையில், அந்த பணியிடம் தற்போது நிரப்பப்பட்டுள்ளது.
  • இதற்காக 3 பேர் பரிசீலிக்கப்பட்டு அது தொடர்பான பட்டியல் ஆளுநரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதனையடுத்து கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வராக பணியாற்றி வரும் கே.நாராயணசாமி டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக நியமிக்கப்பட்டுள்ள நாராயணசாமி 3 ஆண்டுகள் பதவி வகிப்பார். ஓரிரு நாட்களில் துணைவேந்தராக நாராயணசாமி பொறுப்பேற்கவுள்ளார். அதற்கான பணி ஆணையை ஆளுநர் ஆர்.ரன்.ரவி, கே.நாராயணசாமிக்கு  நேரில் வழங்கினார். 

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel