Recent Post

6/recent/ticker-posts

இந்தியாவின் பட்டயக் கணக்காளர்கள் நிறுவனத்திற்கும், மாலத்தீவு பட்டயக் கணக்காளர்களுக்கும் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் / Union Cabinet approves Memorandum of Understanding between Institute of Chartered Accountants of India and Maldives

  • இந்தியாவின் பட்டயக் கணக்காளர்கள் நிறுவனத்திற்கும், மாலத்தீவு பட்டயக் கணக்காளர்களுக்கும் இடையே கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
  • மாலத்தீவிலும், இந்தியாவிலும் கணக்காளர் தொழிலில் பரஸ்பர ஒத்துழைப்பை நிறுவுவதற்கும், தொழில்முறை மற்றும் அறிவார்ந்த வளர்ச்சிக்கும் உதவுவதும் இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் நோக்கமாகும்.  
  • இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் அந்தந்த நாடுகளின் திறன் கட்டமைப்பை வலுப்படுத்துவதில் உதவிபுரிவதோடு தங்களின் தொழில்முறையை விரிவுபடுத்துவதற்கான வாய்ப்பையும் வழங்கும். இந்தியா – மாலத்தீவு இடையே வலுவான பணி உறவுகளை மேம்படுத்தும். 
  • உலகளாவிய கணக்காளர் தொழிலை மேம்படுத்துவதற்கு இந்தியாவிலும், மாலத்தீவிலும் உள்ள கணக்காளர்களின் மேம்பாடு குறித்து அண்மைக் கால தகவல்களை வழங்க இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் வகை செய்கிறது. 

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel