Recent Post

6/recent/ticker-posts

200 சர்வதேச போட்டிகளில் விளையாடிய முதல் கால்பந்தாட்ட வீரர் / First footballer to play 200 international matches

  • கால்பந்தாட்ட உலகின் நட்சத்திர வீரர்களில் ஒருவர் போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்த கிறிஸ்டியானோ ரொனால்டோ.நேற்று, ஐஸ்லாந்து அணிக்கு எதிரான யூரோ கோப்பை கால்பந்து தொடருக்கான தகுதி சுற்றில் அவர் விளையாடினார். 
  • இது அவர் விளையாடிய 200-வது சர்வதேச போட்டி. இதன் மூலம் இந்த மைல்கல்லை எட்டிய முதல் வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். இது கின்னஸ் உலக சாதனையாகவும் அமைந்துள்ளது.
  • சர்வதேச அளவில் அதிக போட்டிகளில் விளையாடிய வீரர் என்ற தனித்துவ சாதனையை அவர் கடந்த மார்ச் மாதம் படைத்திருந்தார். அப்போது குவைத் வீரர் அல்-முதாவாவின் சாதனையை அவர் தாகர்த்தார். 
  • அல்-முதாவா, மொத்தம் 196 சர்வதேச கால்பந்து போட்டிகளில் விளையாடி உள்ளார். யூரோ கோப்பை தகுதிச் சுற்றில் லீக்கின்ஸ்டைன் அணிக்கு எதிராக தனது 197-வது சர்வதேச கால்பந்தாட்ட போட்டியில் ரொனால்டோ விளையாடி அதை முடியடித்தார்.
  • 38 வயதான ரொனால்டோ கடந்த 2003-ல் போர்ச்சுகல் அணிக்காக சர்வதேச கால்பந்தாட்ட போட்டிகளில் விளையாட தொடங்கினார். சர்வதேச போட்டிகளில் மொத்தம் 123 கோல்களை ரொனால்டோ பதிவு செய்துள்ளார். 
  • இதன் மூலம் அதிக கோல்கள் பதிவு செய்த வீரர்களின் பட்டியலிலும் அவர்தான் முதலிடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel