Recent Post

6/recent/ticker-posts

2023-24ம் ஆண்டின் மாநில முதலீட்டு நிதியாக தமிழகத்திற்கு ரூ.4,079 கோடி - ஒன்றிய நிதி அமைச்சகம் ஒப்புதல் / 4,079 crore to Tamil Nadu as State Investment Fund for 2023-24 - Union Finance Ministry approves

  • நிதிப்பகிர்வின் அடிப்படையில் ஒன்றிய நிதித்துறை அமைச்சகம் தரப்பில் அனைத்து மாநிலங்களுக்கும் பங்கீட்டு நிதியானது பிரித்து வழங்கப்படுகிறது.
  • அதன்படி 2023-24ம் ஆண்டின் நடப்பு நிதி ஆண்டிற்கான மூலதன முதலீட்டுக்கு மாநிலங்களுக்கான சிறப்பு உதவி நிதி என்ற வகையில் தமிழகம், அருணாச்சல் பிரதேசம், பீகார், சண்டிகர், கோவா, குஜராத், அரியானா, இமாச்சல், கர்நாடகா, மத்தியப்பிரதேசம், மிசோரம், ராஜஸ்தான், சிக்கிம், தெலங்கானா மற்றும் மேற்கு வங்கம் ஆகிய 16 மாநிலங்களுக்கு மொத்தம் ரூ.56,415 கோடியை ஒதுக்கீடு செய்து ஒன்றிய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
  • இதில் தமிழகத்திற்கு மட்டும் ரூ.4,079 கோடி தொகையை ஒதுக்கி ஒன்றிய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும் இந்த தொகையானது மாநிலத்திற்கான சுகாதாரம், கல்வி, நீர்பாசனம், நீர் வழங்கல், மின்சாரம், பாலங்கள் மற்றும் ரயில்வே உள்ளிட்ட பல்வேறு துறைகளின் மூலதன முதலீட்டு திட்டங்களுக்கு பயன்படுத்தப்பட வேண்டும் என வழங்கப்பட்டுள்ள ஒப்புதலில் ஒன்றிய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
  • இதில் அதிகபட்சமாக பீகார் மாநிலத்திற்கு ரூ.9,640கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel