Recent Post

6/recent/ticker-posts

நீடிக்கவல்ல மேம்பாட்டு ஒத்துழைப்பு கட்டமைப்பு ஒப்பந்தம் 2023-27 / Framework Agreement on Sustainable Development Cooperation 2023-2027

TAMIL

  • நீடிக்கவல்ல மேம்பாட்டு ஒத்துழைப்புத் கட்டமைப்பு ஒப்பந்தம் 2023-27 நித்தி ஆயோக் – ஐநா இடையே இன்று கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தில் நித்தி ஆயோக் சார்பில் அதன் தலைமை நிர்வாக அதிகாரி திரு பிவிஆர் சுப்பிரமணியம், ஐநா சார்பில் இந்தியாவில் உள்ள உறைவிட ஒருங்கிணைப்பாளர் திரு ஷோம்பி ஷார்ப் ஆகியோர் கையெழுத்திட்டனர். 
  • நித்தி ஆயோகின் துணைத் தலைவர் திரு சுமன் பெரி, மத்திய அமைச்சகங்களின் பிரதிநிதிகள் மற்றும் இந்தியாவில் உள்ள ஐநா முகமைகளின் தலைவர்கள் இந்த நிகழ்வில் முன்னிலை வகித்தனர்.
  • பாலின சமத்துவம், இளையோருக்கு அதிகாரமளித்தல், மனிதஉரிமைகள் ஆகியவற்றை மேம்படுத்துகின்ற நீடிக்கவல்ல வளர்ச்சி இலக்குகளை எட்டுவதற்கான மத்திய அரசின் தேசிய தொலைநோக்கு பார்வைக்கு ஏற்ப கூட்டான நடவடிக்கைக்காக இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
  • இந்த ஒப்பந்தம் 2030-க்கான நிகழ்ச்சி நிரலில் இருந்து 4 முக்கிய அம்சங்களை (அதாவது மக்கள், வளம், புவிக்கோள், பங்கேற்பு) கட்டமைப்பதாக இருக்கும். 
  • இந்த 4 முக்கிய அம்சங்களும், சுகாதாரம் மற்றும் நல்வாழ்வு, ஊட்டச்சத்து மற்றும் உணவுப்பாதுகாப்பு, தரமான கல்வி, பொருளாதார வளர்ச்சி மற்றும் கண்ணியமான வேலை, சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை, மக்கள், சமூகங்கள் மற்றும் நிறுவனங்களுக்கு அதிகாரமளித்தல் என்ற 6 பயன்பாடுகளில் கவனம் செலுத்தும்

ENGLISH

  • The Sustainable Development Cooperation Framework Agreement 2023-27 was signed today between NITI Aayog and UN. The agreement was signed on behalf of NITI Aayog by its Chief Executive Officer, Mr. PVR Subramaniam, and on behalf of the United Nations, Mr. Shombhi Sharp, the Accommodation Coordinator in India. Mr. Suman Peri, Vice Chairman, NITI Aayog, representatives of Union Ministries and Heads of UN Agencies in India graced the occasion.
  • The agreement was signed for joint action in line with the Central Government's National Vision to achieve the Sustainable Development Goals that promote gender equality, youth empowerment and human rights.
  • The agreement will build on the 4 key dimensions (ie People, Resources, Planet, Participation) from the 2030 Agenda. These 4 pillars will focus on 6 applications: health and well-being, nutrition and food security, quality education, economic growth and decent work, environment and climate, and empowerment of people, communities and institutions.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel