2015ம் ஆண்டு முதல் ஆண்டு தோறும் ஜூன் 21ந் தேதி சர்வதேச யோகா தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் 9வது சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது.
டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி திரவுபதி முர்மு யோகா நிகழ்ச்சியில் பங்கேற்றார். மத்தியபிரதேசத்தில் நடந்த யோகா நிகழ்ச்சியில் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர், மத்தியபிரதேச முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அதேபோல், பல்வேறு மாநிலங்களில் நடந்த நிகழ்ச்சிகளில் ஒன்றிய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், ஸ்மிருதி இராணி, பியூஷ் கோயல், அஸ்வினி வைஷ்னவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
குறிப்பாக ரயில்வே அமைச்சர் ஒடிசாவில் ரயில் விபத்து நடந்த பாலாசோர் பகுதியில் 7 ஆயிரம் பேருடன் யோகா செய்தார். மாணவ-மாணவியரும், பொதுமக்களும், திரைத்துறை பிரபலங்களும் யோகா நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா பங்கேற்றார். உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையில் யோகா நிகழ்ச்சி நடந்தது. புதுச்சேரியில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பங்கேற்றார். லடாக்கில் உள்ள பங்கோங் டசோ ஆற்றின் அருகே பாதுகாப்பு படையினர் யோகா பயிற்சி மேற்கொண்டனர்.
காஷ்மீரில் உள்ள லேக் நகர் முதல் கன்னியாகுமரி வரை நடந்த யோகா நிகழ்ச்சியில் என்சிசி அமைப்பை சேர்ந்த 11 லட்சம் பேர் பங்கேற்றனர்.
இந்திய ராணுவம் சார்பில் 100க்கும் மேற்பட்ட இடங்களில் சிறப்பு யோகா மேற்ெகாள்ளப்பட்டது. புதுடெல்லி கரியப்பா மைதானத்தில் நடந்த நிகழ்ச்சியில் ராணுவ தலைமை ஜெனரல் மனோஜ் பாண்டே கலந்து கொண்டார்.
இந்திய கடற்படை சார்பில் கப்பல்களில் யோகா தினம் கொண்டாடப்பட்டது. கில்டான், சென்னை, ஷிவாலிக், சனாயனா, திரிசூல், தர்காஷ், வாகிர், சுமித்திரா, பிரம்மபுத்திரா உள்ளிட்ட கடற்படை கப்பல்களில் வீரர்கள் யோகா செய்தனர்.
0 Comments