நாட்டில் ஆராய்ச்சி சூழலை வலுப்படுத்த நாடாளுமன்றத்தில் தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளை மசோதா 2023-ஐ அறிமுகம் செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் / The Union Cabinet approved the introduction of the National Research Foundation Bill 2023 in the Parliament to strengthen the research environment in the country
பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், நாட்டில் ஆராய்ச்சி சூழலை வலுப்படுத்த நாடாளுமன்றத்தில் தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளை மசோதா
2023-ஐ அறிமுகம் செய்ய ஒப்புதல் வழங்கப்பட்டது. இந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதன் விளைவாக தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளை மென்மேலும் வளர்ச்சியடைந்து ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு செயல்பாடுகளை ஊக்குவித்து, நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், ஆராய்ச்சி நிறுவனங்கள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்புகளை ஊக்கப்படுத்தும் ஒரு சூழ்நிலையை ஏற்படுத்தும்.
இந்த மசோதா நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெற்ற பிறகு தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளை நிறுவப்படும். 2023 – 2028 ஆண்டு காலகட்டத்தில் சுமார் ரூ.50,000 கோடி மதிப்பீட்டில் தேசிய கல்விக் கொள்கையின் ஆலோசனைகளின்படி நாட்டில் உயர்மட்ட அறிவியல் சார்ந்த ஆராய்ச்சிகள் நடத்தப்பதற்கான உச்சபட்ச அமைப்பாக தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளை அமையும்.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் நிர்வாக அமைப்பாக தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளை விளங்கும். இந்த அமைப்பை பல்வேறு துறைகளைச் சார்ந்த தலைசிறந்த ஆராய்ச்சியாளர்கள் மற்றும் தொழில் சார்ந்தவர்கள் மூலம் நிர்வாகம் செய்யப்படும்.
தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளை அனைத்து அமைச்சகங்களுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் பிரதமர் அதிகாரப்பூர்வ தலைவராகவும், அறிவியல், தொழில்துறை அமைச்சர், மத்திய கல்வித்துறை அமைச்சர் ஆகியோர் அதிகாரப்பூர்வ துணைத் தலைவர்களாகவும் செயல்படுவர்.
தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளை பணிகளை மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் தலைமையிலான குழு நிர்வாகம் செய்யும்.
தொழில் துறை, கல்வி மற்றும் அரசுத் துறைகள் அனைத்தையும் ஒன்றிணைத்து தொழிற்சாலைகளின் பங்களிப்பை ஒருங்கிணைக்கும் அமைப்பாக விளங்கும்.
இதற்கு மாநில அரசுகளின் அறிவியல் மற்றும் துறை சார்ந்த அமைச்சகங்கள் துணைபுரியும். இதன் விளைவாக கொள்கை ரீதியிலான முடிவுகளை எடுக்கவும் ஒழுங்கு முறை தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் ஏதுவாக அமைந்து ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு அதிகளவில் நிதியுதவி ஏற்படுத்துவதற்கு வழிவகை செய்யும்.
இந்த மசோதா மூலம் 2008 ஆம் ஆண்டில் நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெறப்பட்ட சட்டத்தின் மூலம் ஏற்படுத்தப்பட்ட அறிவியல் மற்றும் பொறியியல் ஆராய்ச்சி ஆணையத்தின் பணிகளை தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளை மேற்கொள்ளும்.
0 Comments