Recent Post

6/recent/ticker-posts

சா்வதேச பொருளாதார வாய்ப்பு நிலை குறித்த உலக வங்கி அறிக்கை 2023 / World Bank Report on State of Global Economy 2023

TAMIL

  • உலக வங்கி சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட சா்வதேச பொருளாதார வாய்ப்பு நிலை குறித்த அறிக்கையில் சா்வதேச பொருளாதார வளா்ச்சி 2022-இல் 3.1 சதவீதமாக இருந்தது, 2023-ஆம் ஆண்டில் 2.1 சதவீதமாக சரிய வாய்ப்புள்ளது.
  • சீனாவைத் தவிா்த்து பிற வளா்ந்து வரும் பொருளாதார நாடுகள் மற்றும் சந்தைகளைப் பொருத்தவரை, கடந்த ஆண்டில் 4.1 சதவீதமாக இருந்தது நிகழாண்டில் 2.9 சதவீதமாக சரிய வாய்ப்புள்ளது. 
  • இந்தியாவைப் பொருத்தவரை 0.3 சதவீதம் அளவுக்கு சரிந்து 6.3 சதவீதமாக குறைய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து உலக வங்கி குழுமத் தலைவா் அஜய் பங்கா கூறுகையில், 'வேலைவாய்ப்பை உருவாக்குவதன் மூலம் மட்டுமே வறுமையை ஒழித்து, வளா்ச்சியை பரப்ப முடியும்.
  • ஆனால், மந்தமான பொருளாதார வளா்ச்சி வேலைவாய்ப்பை உருவாக்குவதை அதிக கடினமானதாக்கிவிடும். அதே நேரம், பொருளாதார வளா்ச்சி முன்கணிப்பை முடிவாக கருதிவிடக்கூடாது. 
  • நாடுகள் இணைந்து பணியாற்றுவதன் மூலமாக, வாய்ப்புகளை உருவாக்க முடியும் என்று கூறினாா். இந்தியா வம்சாவளியான அஜய் பங்கா உலக வங்கி தலைவராக கடந்த வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றாா் என்பது குறிப்பிடத்தக்கது.

ENGLISH

  • Global economic growth is expected to slow to 2.1 percent in 2023, from 3.1 percent in 2022, according to the World Bank's International Economic Prospects report released on Tuesday. 
  • As far as other emerging economies and markets other than China are concerned, it is likely to decline from 4.1 percent last year to 2.9 percent this year. As far as India is concerned, it is reported that it is likely to decrease by 0.3 percent to 6.3 percent. 
  • World Bank Group Chairman Ajay Banga said, 'Poverty can be eradicated and growth spread only by creating employment.
  • But sluggish economic growth will make job creation more difficult. At the same time, the economic growth forecast should not be considered conclusive. He said that by working together, countries can create opportunities. It is noteworthy that Ajay Banka, who is of Indian origin, took over as the President of the World Bank last Friday.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel