கங்கைகொண்ட சோழபுரம் மாளிகைமேடு அகழாய்வில் சீன பானை ஓடு உட்பட 3 பழங்கால பொருட்கள் கண்டெடுப்பு / 3 antiquities including a Chinese pot shell found in excavation of Gangaikonda Cholapuram palace mound
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகேயுள்ள கங்கைகொண்ட சோழபுரத்தில் பிரகதீஸ்வரர் கோயில் அருகே உள்ள மாளிகைமேட்டில் ஏற்கெனவே 2 கட்டங்களாக அகழாய்வுப் பணிகள் நடைபெற்றன.
இதில், ராஜேந்திர சோழன் கால அரண்மனையின் சுவர்கள் மற்றும் சீன வளையல்கள், இரும்பு ஆணிகள் உட்பட 461 பழங்கால பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன.
இந்நிலையில் ஏப்.6-ம் தேதி முதல் 3-ம் கட்ட அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில், 21 பணியாளர்களைக் கொண்டு 16 குழிகள் தோண்டப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. இங்கு செங்கற்கலால் ஆன வாய்க்கால் போன்ற அமைப்பு கடந்த மே மாதம் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்நிலையில், சீன பானை ஓடுகள், காசு வார்ப்பு, அலங்கரிக்கப்பட்ட சுடு மண்ணால் ஆன அச்சு முத்திரை ஆகியவை தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
0 Comments