Recent Post

6/recent/ticker-posts

4வது காலாண்டில் ஜிடிபி 6.1% உயர்வு; பொருளாதார வளர்ச்சி 7.2% / Economic Growth 7.2% & GDP up 6.1% in 4th quarter;

  • கடந்த நிதியாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.2 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளது, நான்காவது காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 6.1 சதவீதம் அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
  • ஜனவரி-மார்ச் காலாண்டில் ஜிடிபி வளர்ச்சி முந்தைய இரண்டு காலாண்டுகளில் சரிவுக்குப் பிறகு உயர்வு அடைந்துள்ளது. அக்டோபர் முதல் டிசம்பர் வரையான மூன்றாவது காலாண்டில் ஜிடிபி 4.5 சதவீதம் வளர்ச்சி கண்டது. நான்காவது காலாண்டு மதிப்பீடு, முந்தைய ஆண்டின் இதே கட்டத்தில் அடைந்த வளர்ச்சியைவிட 4 சதவீதம்அதிகமாக உள்ளது.
  • 2022-23 நிதியாண்டுக்கான ஒட்டுமொத்த மதிப்பீடு முந்தைய ஆண்டின் 9.1 சதவீத வளர்ச்சியைக் காட்டிலும் குறைவாக உள்ளது.
  • இந்திய ரிசர்வ் வங்கி 2022-23 நிதியாண்டில் ஜிடிபி வளர்ச்சியை 7 சதவீதமாக மதிப்பிட்டுள்ளது. இருப்பினும் ஆர்பிஐ ஆளுநர் சக்திகாந்த தாஸ், ஜிடிபி வளர்ச்சி கணிக்கப்பட்டுள்ள மதிப்பீட்டைக் காட்டிலும் அதிகமாக இருந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை என்று கூறியிருந்தார்.
  • வர்த்தகம், ஹோட்டல்கள் மற்றும் போக்குவரத்துத் துறைகள் 14 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன.
  • சமீபத்திய ஆய்வு அறிக்கையில், அடுத்த சில ஆண்டுகளில் இந்தியா ஜி20 நாடுகளில் வேகமாக வளரும் பொருளாதாரம் கொண்ட நாடாக இருக்கும் என்று அமெரிக்காவைச் சேர்ந்த பொருளாதார மதிப்பீட்டு நிறுவனமான மூடிஸ் கூறியுள்ளது.
  • இந்தியாவில் நகரமயமாக்கல் வீட்டுகள் மற்றும் கார்களுக்கான தேவையை அதிகரிக்கும். அதே வேளையில், அரசாங்க உள்கட்டமைப்பு செலவுகள் எஃகு மற்றும் சிமெண்டிற்கான தேவையை தூண்டும் என மூடிஸ் அறிக்கை சொல்கிறது.
  • 2023 ஏப்ரல் மாதத்தில் முந்தையை 2022 ஏப்ரல் மாதத்தை ஒப்பிடுகையில், 8 முக்கிய உற்பத்தித் துறைகளின் வளர்ச்சி விகிதம் 3.5 சதவீதம் அதிகரித்துள்ளது.
  • உரம், எஃகு, சிமெண்ட், நிலக்கரி ஆகிய துறைகளின் உற்பத்தி கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தை ஒப்பிடுகையில், இந்த ஆண்டு அதிகரித்துள்ளது. கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, பெட்ரோலிய சுத்திகரிப்புப் பொருட்கள், மின்சாரம் ஆகியவற்றின் உற்பத்தி சற்று சரிந்துள்ளது.
  • நிலக்கரி உற்பத்தி முந்தைய ஆண்டைக் காட்டிலும் 9 சதவீதமும், உர உற்பத்தி 23.5 சதவீதமும், எஃகு உற்பத்தி 12.1 சதவீதமும், சிமெண்ட் உற்பத்தி 11.6 சதவீதமும் அதிகரித்துள்ளது.
  • கச்சா எண்ணெய் உற்பத்தி 3.5 சதவீதமும், இயற்கை எரிவாயு உற்பத்தி 2.8 சதவீதமும், பெட்ரோலிய சுத்திகரிப்புப் பொருட்களின் உற்பத்தி 1.5 சதவீதமும், மின்னுற்பத்தி 1.4 சதவீதமும் குறைந்துள்ளது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel