இந்திய ரயில்வே துறையை நவீனப்படுத்தும் முயற்சியில் மத்திய அரசு சமீபகாலமாக செயல்பட்டு வருகிறது. இந்திய ரயில்வே துறையில் மிகவும் அதிவேக ரயிலாகவும், மிகவும் சொகுசான ரயிலாகவும் வந்தே பாரத் ரயில் இயங்கி வருகிறது.
நாட்டின் முதல் வந்தே பாரத் ரயில் சேவை கடந்த 2019ம் ஆண்டு தொடங்கப்பட்டது. நாடு முழுவதும் 17 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.
பிரதமர், ஐந்து வந்தே பாரத் ரயில்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார். ராணி கமலாபதி - ஜபல்பூர் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்; கஜுராஹோ - போபால் - இந்தூர் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்; மட்கான் (கோவா) - மும்பை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்; தார்வாட் - பெங்களூரு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்; ஹதியா - பாட்னா வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ஆகிய ஐந்து ரயில் சேவைகள் தொடங்கி வைக்கப்பட்டது.
மக்களின் பயன்பாட்டிற்காக அதி விரைவு ரயிலான வந்தே பாரத் ரயில் சேவை நாடு முழுவதும் தொடங்கி வைக்கப்பட்டது. ஏற்கனவே தமிழ்நாடு, கேரளா, அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் இந்த சேவை தொடங்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது.
0 Comments