அண்டை நாடான இலங்கை கடந்தாண்டு கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்தது. இதையடுத்து அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலகக் கோரி நாடு முழுவதும் போராட்டம் தீவிரமடைந்தது. இதையடுத்து பதவி விலகிய கோத்தபய ராஜபக்சே நாட்டை விட்டு தப்பி சென்றார்.
கடும் நெருக்கடியில் சிக்கிய இலங்கைக்கு இந்தியா கடன் உதவி அளித்துள்ளது. இந்நிலையில், இலங்கையின் ஏழைகள் மற்றும் நலிந்த பிரிவினருக்கு உதவுவதற்காக சுமார் ரூ.5742 கோடி நிதி உதவி அளிப்பதற்கு உலக வங்கி ஒப்புதல் அளித்துள்ளது.
இதில் ரூ.4100 கோடி பட்ஜெட் உதவிக்காகவும் ரூ.1642 கோடி சமூக பாதுகாப்பு திட்டங்களுக்காகவும் ஒதுக்கப்படும் என உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
0 Comments