Recent Post

6/recent/ticker-posts

ரூ.8,000 கோடி மதிப்பிலான பேரிடர் மேலாண்மை திட்டங்களை அறிவித்தார் அமித்ஷா / Amit Shah announced disaster management schemes worth Rs 8,000 crore

  • மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் இன்று காலை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர்களிடம் விக்யான் பவனில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. 
  • அந்த கூட்டத்தில் ரூ.8,000 கோடி மதிப்பிலான பேரிடர் மேலாண்மைக்கான மூன்று முக்கிய திட்டங்களை அமித்ஷா அறிவித்துள்ளார்.
  • அதன்படி, மாநிலங்களில் தீயணைப்பு சேவைகளை விரிவுபடுத்தவும் நவீனப்படுத்தவும் மொத்தம் ரூ.5,000 கோடி திட்டம் செயல்படுத்தப்படும் என்றும், அதிக மக்கள்தொகை கொண்ட மும்பை, சென்னை, கொல்கத்தா பெங்களூரு, ஹைதராபாத், அகமதாபாத் மற்றும் புனே ஆகிய 7 பெருநகரங்களுக்கு ரூ.2,500 கோடி திட்டமும் செயல்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.
  • மேலும், 17 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நிலச்சரிவு தணிப்புக்காக ரூ.825 கோடியில் தேசிய நிலச்சரிவு அபாயத் தணிப்புத் திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் கூறிய அமித்ஷா, கடந்த ஒன்பது ஆண்டுகளில் மத்திய அரசு பேரிடர் மேலாண்மை துறையில் நிறைய சாதித்துள்ளது. 
  • அணு மின் நிலையங்கள் அமைக்கப்படும் மாநிலங்களுக்கு அவசரகால சூழ்நிலையில் பின்பற்ற வேண்டிய கடுமையான நெறிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன என்று தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel