Recent Post

6/recent/ticker-posts

BAL SAHITYA PURASKAR AWARD 2023 & YUVA PURASKAR AWARD 2023 / பால சாகித்ய புரஸ்கார் விருது 2023 & யுவ புரஸ்கார் விருது 2023

TAMIL

  • BAL SAHITYA PURASKAR AWARD 2023 & YUVA PURASKAR AWARD 2023 / பால சாகித்ய புரஸ்கார் விருது 2023 & யுவ புரஸ்கார் விருது 2023: 2023 ஆண்டின் குழந்தை இலக்கியத்துக்கான 'பால சாகித்ய புரஸ்கார்' விருது டெல்லியில் அறிவிக்கப்பட்டது.
  • இதில் தமிழ் மொழிக்கான விருதுக்கு எழுத்தாளர் உதயசங்கர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் எழுதிய 'ஆதனின் பொம்மை' என்ற நாவலுக்கு இந்த விருது கிடைத்துள்ளது. 
  • கோவில்பட்டியில் பிறந்தவரான உதயசங்கர், தமிழகத்தின் நிகழ்கால குழந்தை இலக்கிய எழுத்தாளர்களில் மிகவும் முதன்மையானவராகக் கருதப்படுகிறார். சிறுகதை, கவிதை, கட்டுரை, மொழிபெயர்ப்பு என 40 ஆண்டுகளுக்கும் மேலாக எழுதி வருகிறார்.
  • இந்திய மொழிகள் மற்றும் ஆங்கிலத்தில் சிறப்பாக எழுதி வரும் 35 வயதுக்குட்பட்ட இளம் இந்திய எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் வகையில் சாகித்ய அகாடமி சார்பில் ஆண்டுதோறும் 'யுவ புரஸ்கார்' விருது வழங்கப்படுகிறது. 
  • 2023-ம் ஆண்டின் தமிழ் மொழிக்கான விருதுக்கு எழுத்தாளர் ராம் தங்கம் எழுதிய 'திருக்கார்த்தியல்' என்ற சிறுகதைத் தொகுப்பு தேர்வு செய்யப்பட்டுள்ளது. 
  • நாகர்கோவிலைச் சேர்ந்தவரான ராம் தங்கம், முன்னணி நிறுவனங்களில் பத்திரிகையாளராகப் பணியாற்றி தற்போது முழுநேர எழுத்தாளராக எழுதி வருகிறார்.
  • விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள எழுத்தாளர்களுக்கு ரூ.50 ஆயிரத்துக்கான காசோலை, செப்புப் பட்டயம் ஆகியவை கொண்ட விருது புதுடெல்லியில் பின்னர் நடைபெறும் சிறப்பு நிகழ்வில் வழங்கப்படும். 

ENGLISH

  • BAL SAHITYA PURASKAR AWARD 2023 & YUVA PURASKAR AWARD 2023: The 'Bal Sahitya Puraskar' Award for Children's Literature 2023 was announced in Delhi. Writer Udaya Shankar has been selected for the award for Tamil language. He has received this award for his novel 'Adan's Toy'.
  • Born in Kovilpatti, Udaya Shankar is regarded as one of Tamil Nadu's foremost children's writers. He has been writing short stories, poems, essays and translations for over 40 years.
  • 'Yuva Puraskar' is an annual award given by Sahitya Akademi to encourage young Indian writers under the age of 35 who are writing well in Indian languages and English. The short story collection 'Thirukarthiyal' written by writer Ram Thangam has been selected for the 2023 Tamil Language Award. Hailing from Nagercoil, Ram Thangam has worked as a journalist in leading companies and is currently writing as a full-time writer.
  • The shortlisted writers will be presented with a check of Rs 50,000 and a copper plaque at a special function to be held later in New Delhi.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel