தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் படி, தமிழக அரசின் சார்பில் கடந்த 2005ம் ஆண்டு மாநில தகவல் ஆணையம் உருவாக்கப்பட்டது. இந்த ஆணையத்துக்கு முதலில் தலைமை தகவல் ஆணையர் ஒருவர் மற்றும் 2 தகவல் ஆணையர்கள் நியமிக்கப்பட்டு இருந்தனர். பின்னர் கடந்த 2008-ம் ஆண்டு தகவல் ஆணையர்களின் எண்ணிக்கை இரண்டில் இருந்து ஆறாக உயர்த்தப்பட்டு இருந்தது.
தகவல் ஆணையராக ஆர்.ராஜகோபால் பதவிக்காலம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முடிந்தது. அதேபோல், தகவல் ஆணையர்களாக இருந்த எஸ்.செல்வராஜ், எஸ்.டி.தமிழ்ச்செல்வன், ஆர்.பிரதாப்குமார், எஸ்.முத்துராஜ், பி.தனசேகரன், எம்.ஸ்ரீதர் ஆகியோரின் பதவிக்காலம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிறைவடைந்தது.
இந்த நிலையில் இன்று தமிழ்நாடு தலைமை தகவல் ஆணையராக முன்னாள் டிஜிபி ஷகில் அக்தர் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழ்நாடு மாநில தகவல் ஆணையத்தில் ஆணையர் பதவிகளும் நிரப்பப்பட்டுள்ளன.
முன்னாள் ஏடிஜிபிக்களான தாமரைக்கண்ணன், பிரியாகுமார், திருமலை முத்து, செல்வராஜ் ஆகியோர் ஆணையர்களாக நியமிக்கப்பட்டுள்ளார். தலைமை தகவல் ஆணையராக ஷகில் அக்தர் மூன்று ஆண்டுகள் பதவி வகிப்பார்.
0 Comments