Recent Post

6/recent/ticker-posts

சீனாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே அணுஉலை ஒப்பந்தம் / Nuclear deal between China and Pakistan

  • சீன தலைநகர் பெய்ஜிங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாகிஸ்தான் பிரதமர் செபாஷ் செரீப் முன்னிலையில் இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. 
  • இதன்படி இந்திய எல்லை அருகே அமைந்துள்ள பஞ்சாப் மாகாணத்தில் 39 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்படவுள்ள இந்த அணுஉலையில் 1200 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
  • பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் பாகிஸ்தானில் ஓராண்டாக கடும் மின்சார தட்டுப்பாடு நிலவி வருகிறது. கடந்த ஆண்டு ஏற்பட்ட வெள்ள பாதிப்பு மற்றும் ரஷ்யா, உக்ரைன் போரால் பாகிஸ்தான் எரிசக்தி துறை கடும் நெருக்கடியை சந்தித்து வருகிறது. 
  • மின் தடை காரணமாக வர்த்தக நிறுவனங்கள் இரவு 8 மணி வரை மட்டுமே இயங்க வேண்டும் என்று கடந்த டிசம்பரில் பாகிஸ்தான் அரசு அறிவித்தது. இச்சூழலில் அணுவுலை ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel