Recent Post

6/recent/ticker-posts

இந்தியா-அமெரிக்கா இடையே உயர் தொழில்நுட்ப ஒத்துழைப்பு நிகழ்வில் பிரதமர் பங்கேற்பு / Prime Minister participates in India-US Hi-Tech Cooperation event

  • வாஷிங்டன் டி.சி.யில் உள்ள வெள்ளை மாளிகையில் நடைபெற்ற இந்தியா-அமெரிக்கா இடையேயான உயர் தொழில்நுட்ப ஒத்துழைப்பு நிகழ்வில் பிரதமர் திரு நரேந்திர மோடியும் அமெரிக்க அதிபர் திரு ஜோசப் ஆர். பைடனும் பங்கேற்றனர். 
  • இந்நிகழ்வை அமெரிக்க வர்த்தக அமைச்சர் திருமதி ஜினா ரைமண்டோ ஒருங்கிணைத்தார். இதில் இந்திய, அமெரிக்கத் தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் ஸ்டார்ட் அப்களின் முன்னணித் தலைமை நிர்வாக அதிகாரிகள் பங்கேற்றனர். 
  • 'அனைவருக்குமான செயற்கை நுண்ணறிவு', 'மனிதகுலத்திற்கான உற்பத்தி' என்பதில் கவனம் செலுத்துவது இந்த நிகழ்வின் கருப்பொருளாக இருந்தது.
  • இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே ஆழமான தொழில்நுட்ப ஒத்துழைப்பை ஆய்வுசெய்ய இரு தலைவர்களுக்கும் இந்த நிகழ்வு ஒரு நல்வாய்ப்பாக அமைந்தது. 
  • தங்களின் குடிமக்கள் மற்றும் உலகத் தேவைகளைப் பூர்த்தி செய்ய செயற்கை நுண்ணறிவால் இயக்கப்படும் அனைவரையும் உள்ளடக்கிய பொருளாதாரத்தை செயல்படுத்துவதில் இந்தியா-அமெரிக்க தொழில்நுட்ப ஒத்துழைப்பின் பங்கு மற்றும் சாத்தியக்கூறுகள் குறித்து விவாதங்கள் கவனம் செலுத்தின. 
  • இந்தியாவின் திறமையான பணியாளர்கள் மற்றும் டிஜிட்டல் பொதுக்கட்டமைப்பில் இந்தியா மேற்கொண்ட முன்னேற்றங்கள் என்பதுடன் உலகளாவிய ஒத்துழைப்புகளைக் கட்டமைக்க, இரண்டு தொழில்நுட்ப சூழல் அமைப்புகளுக்கும் இடையே உள்ள தொடர்புகளை மேம்படுத்துவதற்கான வழிகளைத் தலைமை நிர்வாக அதிகாரிகள் ஆய்வுசெய்தனர். 
  • உத்திகள் வகுத்தலில் ஒருங்கிணைப்பு, தரநிலைகளில் ஒத்துழைப்பு, புதிய கண்டுபிடிப்புகளை அதிகரித்தல் ஆகியவற்றைத் தொடங்க அந்தந்தத் தொழில்களுக்கு இடையே வழக்கமான ஈடுபாட்டிற்கு அவர்கள் அழைப்பு விடுத்தனர்.
  • சமூக-பொருளாதார வளர்ச்சிக்கு இந்திய-அமெரிக்க தொழில்நுட்ப ஒத்துழைப்பைப் பயன்படுத்துவதற்குரிய மகத்தான திறனைப் பிரதமர் தமது பேச்சில் அடிக்கோடிட்டுக் காட்டினார். 
  • புதிய கண்டுபிடிப்பு கலாச்சாரத்தை வளர்ப்பதில் இந்தியாவின் திறமைமிக்க இளைஞர்களின் பங்களிப்பையும் அவர் பாராட்டினார். உயிரித்தொழில்நுட்பம், குவாண்டம் உள்ளிட்ட புதிய துறைகளுக்கு இந்திய-அமெரிக்கத் தொழில்நுட்ப ஒத்துழைப்பை விரிவுபடுத்த உதவுமாறு தலைமை நிர்வாக அதிகாரிகளுக்கு அதிபர் பைடன் அழைப்பு விடுத்தார். 
  • இந்தியா-அமெரிக்கா ஒத்துழைப்பு நமது மக்களுக்கும் உலகிற்கும் சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவதில் முக்கியப் பங்கு வகிக்கும் என்பதை இரு தலைவர்களும் வலியுறுத்தினர்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel