தமிழக டிஜிபியாக பொறுப்பு வகிக்கும் சைலேந்திரபாபு நாளையுடன் பணி ஓய்வு பெற இருக்கும் நிலையில் தற்பொழுது சென்னை காவல் ஆணையராக இருந்த சங்கர் ஜிவால் தமிழக டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
1990-பேட்ச் ஐபிஎஸ் அதிகாரியான திரு. ஜிவால் 30 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு காவல் பிரிவுகளில் வெவ்வேறு பதவிகளில் பணியாற்றியுள்ளார்.
அவர் வகித்து வந்த சென்னை காவல் ஆணையர் பொறுப்பு காலியானதை அடுத்து அந்த பதவிக்கு 109 வது ஆணையராக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
0 Comments