மண் வளத்திற்கு புத்துயிரூட்டல், உணவுப் பாதுகாப்பு, நீடித்த, நிலையான சுற்றுச்சூழலை மேம்படுத்துதல் மற்றும் விவசாயிகள் நலனைப் பாதுகாக்க மத்திய அரசின் பிரத்யேக அறிவிப்பு / A special announcement by the Central Government to revitalize soil fertility, food security, promote sustainable and sustainable environment and protect the welfare of farmers.
மண் வளத்திற்கு புத்துயிரூட்டல், உணவுப் பாதுகாப்பு, நீடித்த, நிலையான சுற்றுச்சூழலை மேம்படுத்துதல் மற்றும் விவசாயிகள் நலனைப் பாதுகாக்க பிரத்யேக அறிவிப்புகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
விவசாயிகளுக்கு ரூ.3,70,128 கோடி செலவிலான புத்தாக்கத் திட்டங்களைக் கொண்ட பிரத்யேக தொகுப்பிற்கு, பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக்குழு (சிசிஇஏ) இன்று (28.06.2023) ஒப்புதல் அளித்துள்ளது.
நிலையான வேளாண்மையை முன் நிறுத்துவதன் மூலம் விவசாயிகளின் பொருளாதார மேம்பாடுட்டிற்கும், ஒட்டுமொத்த நலனுக்கும் இந்தத் திட்டங்கள் முக்கியத்துவம் அளிக்கும்.
இந்த முன்னெடுப்புகள் விவசாயிகளின் வருமானத்தை ஊக்குவிப்பதுடன், இயற்கை வேளாண்மையை வலுப்படுத்தி, மண் வளத்தைப் புத்துயிர் பெறச்செய்து உணவுப் பாதுகாப்பை உறுதி செய்ய பெரிதும் உதவும்.
இதேபோல் யூரியா மானியத்திட்டத்தைத் தொடர சிசிஇஏ ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி 45 கிலோ எடை கொண்ட யூரியா மூட்டை ரூ.242க்கு விவசாயிகளுக்கு கிடைப்பது உறுதி செய்யப்படும். 45 கிலோ எடை கொண்ட யூரியா மூட்டையின் சந்தை விலை ரூ.2,200 ஆகும்.
உள்நாட்டு யூரியா உற்பத்தியை அதிகரிக்க யூரியா மானியத் திட்டத்தை தொடர்வது நல்ல பலனைக் கொடுக்கும். இதற்கு ஏதுவாக அடுத்த 3 ஆண்டுகளுக்கு (2022-23 முதல் 2024-25) யூரியா மானியத்திட்டத்திற்கு ரூ.3,68,676 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
2025-26-ஆம் நிதியாண்டில் 195 லட்சம் மெட்ரிக் டன் யூரியாவை உற்பத்தி செய்யும் திறன் கொண்ட 8 நானோ யூரியா ஆலைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இதே போல் மண் வளத்தை மேம்படுத்தி புத்துயிரூட்ட புத்தாக்க நடைமுறைகளைக் கொண்ட தொகுப்பிற்கும் இன்று ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இதன்படி விவசாயக் கழிவுகளிலிருந்து வருமானத்தை ஈட்ட வகை செய்யும் சந்தை வளர்ச்சி உதவித் திட்டத்திற்கு ரூ.1,451 கோடி ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. பயோ-கேஸ் ஆலைகள் மற்றும் உயர் அழுத்த பயோ-கேஸ் ஆலைகளை கோபர்தன் திட்டத்தின் கீழ் அமைத்து இயற்கை உரங்களையும், பாஸ்பேட் ஊட்டச்சத்துமிக்க பூச்சிக்கொல்லி மருந்துகளையும் தயாரிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
நாட்டிலேயே முதல் முறையாக கந்தகப் பூச்சுக் கொண்ட யூரியாவை அறிமுகம் செய்யும் முயற்சிக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மண்ணின் கந்தகக் குறைப்பாட்டை நீக்குவதுடன் மண் வளத்தைப் பாதுகாத்து விவசாயிகளின் செலவும் குறைக்கப்படும்.
இந்த யூரியா தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் வேப்பம் பூச்சு யூரியாவைவிடக் குறைந்த செலவிலானது. இதன் மூலம் விவசாயிகளின் உரத்திற்கான செலவு குறைவதுடன், உற்பத்தியை அதிகரித்து அவர்களின் வருமானத்தையும் மேம்படுத்த முடியும்.
நாடு முழுவதும் இயக்கப்பட்டு வரும் பிரதமரின் கிசான் சம்ருதி மையங்களின் எண்ணிக்கை தற்போது ஒரு லட்சத்தை எட்டியுள்ளது. விவசாயிகளுக்கு தேவையான உரங்கள், விதைகள் உள்ளிட்ட அனைத்து வேளாண் பொருட்களும் இந்த மையங்களில் கிடைக்கும்.
0 Comments