எஸ்.பி.ஐ.,யின் நிர்வாக இயக்குனர் சுவாமிநாதன் ஜானகிராமன், ரிசர்வ் வங்கியின் துணை கவர்னராக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
பதவியில் சேர்ந்த நாளில் இருந்து மூன்று ஆண்டுகள் அல்லது மறு உத்தரவு வரும் வரை, துணை கவர்னராக சுவாமிநாதன் பதவியில் நீடிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரிசர்வ் வங்கி துணை கவர்னர் எம்.கே.ஜெயின் பதவிக் காலம் முடிவடைந்ததை அடுத்து அவரது இடத்துக்கு சுவாமிநாதன் தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.
பெங்களூருவில் உள்ள எஸ்.பி.ஐ., வங்கியில் தனது பணியைத் துவக்கிய சுவாமிநாதன், சுமார், 34 ஆண்டுகளுக்கும் மேலாக, கார்ப்பரேட் மற்றும் சர்வதேச வங்கி, சில்லரை வணிகம் மற்றும் டிஜிட்டல் வங்கி, நிதி மற்றும் உத்தரவாத செயல்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணியாற்றி உள்ளார்.
0 Comments