அனல் மின் நிலையங்களில் மின்சாரம் தயாரிக்க பயன்படுத்தப்படும் பயோமாஸ் துகள்களின் விலையை நிர்ணயம் செய்ய மத்திய மின்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
உயிரி எரிபொருள் துகள்களுக்கான வளர்ந்து வரும் சந்தை நிலைமைகளை கருத்தில் கொண்டு, அனல் மின் நிலையங்கள், துகள்கள் உற்பத்தியாளர்கள், விவசாயிகள், வங்கியாளர்கள் உள்ளிட்ட பங்குதாரர்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கைகளைக் கருத்தில் கொண்டும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
வணிக நம்பகத்தன்மை, மின் கட்டணத்தில் தாக்கம் மற்றும் மின் பயன்பாடுகள், திறமையான மற்றும் விரைவான துகள்கள் கொள்முதல் ஆகியவற்றை வரையறுக்கப்பட்ட விலை கணக்கில் எடுத்துக்கொள்ளும். மத்திய மின்சார ஆணையத்தின் கீழ் உள்ள குழுவால் இறுதி செய்யப்பட்ட வரையறுக்கப்பட்ட விலை நடைமுறை 2024 ஜனவரி 1 முதல் அமுலுக்கு வரும்.
இக்குழுவின் பரிந்துரைகள் செயல்படுத்தப்படும் வரை, மின் நிறுவனங்கள் தங்கள் அனல் மின் நிலையங்களுக்கு உயிரி எரிபொருள் துகள்களின் உடனடித் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக குறுகிய கால டெண்டர்களுக்குச் செல்ல வேண்டும்
0 Comments