Recent Post

6/recent/ticker-posts

முதியோர் உதவிதொகை ரூ.1,200ஆக உயர்த்த தமிழ்நாடு அமைச்சரவை கூட்டத்தில் முடிவு / Tamil Nadu cabinet meeting decided to increase the senior citizen allowance to Rs.1,200

  • தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இந்த அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களை சந்தித்து பேசினார்
  • அதில், தமிழ்நாட்டில் சுமார் 30 லட்சம் பேர் சமூக நல பாதுகாப்பு திட்டங்கள் மூலமாக பயனடைகின்றனர். ஓய்வூதியத்திற்கு விண்ணப்பித்து காத்திருக்ககூடியவர்களுக்கும் விரைவில் ஓய்வுதியம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். சமூக நலத் திட்டங்களுக்கு ரூ. 845 கோடி கூடுதலாக செலவாகும்.
  • முதியோர், ஆதரவற்றோர் மாத உதவித்தொகை ரூ.1,200 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. கைம்பெண்களுக்கான உதவித்தொகையும் ரூ. 1000-லிருந்து ரூ. 1,200 ஆக உயர்த்தப்பட உள்ளது. 
  • மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை ரூ. 1,500 ஆக உயர்த்தப்பட உள்ளது. உயர்த்தப்பட்ட உதவித்தொகைகள் ஆகஸ்ட் மாதம் முதல் வழங்கப்படும்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel