உத்தர பிரதேசத்தில் ரூ.12,600 கோடி, சத்தீஸ்கரில் ரூ.7,600 கோடி திட்டங்கள் - பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார் / Rs 12,600 crore projects in Uttar Pradesh, Rs 7,600 crore projects in Chhattisgarh - Prime Minister Narendra Modi launched
சத்தீஸ்கர் தலைநகர் ராய்ப்பூரில் நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடி பங்கேற்றார். அப்போது ராய்ப்பூர் - கோடெபோட், பிலாஸ்பூர்- பத்ரபாலி இடையே தேசிய நெடுஞ்சாலை திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
ராய்ப்பூர்-காரியார் இடையே 103 கி.மீ நீளமுள்ள ரயில் பாதையும், கியோட்டி - அந்தகர் இடையே 17 கிமீ புதிய ரயில் பாதையையும், கோர்பாவில் இந்தியன் ஆயில் கார்ப்பரேசனுக்கான ஆலையையும் அவர் தொடங்கி வைத்தார்.
இதுதவிர்த்து, ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ், பயனாளர் அட்டை விநியோகத்தையும் அவர் தொடங்கி வைத்தார். அந்தகர் மற்றும் ராய்பூர் இடையே புதிய ரயில் சேவையை ஆரம்பித்து வைத்தார்.
ஒட்டுமொத்தமாக பிரதமர் நரேந்திர மோடி ரூ.7,600 கோடி மதிப்பில் பல்வேறு திட்டங்களை தொடங்கியும் பல திட்டங்களுக்கு அடிக்கல்லும் நாட்டினார்.
உத்தர பிரதேசத்தின் கோரக்பூரில் செயல்படும் கீதா பதிப்பகத்தின் நூற்றாண்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார்.
இதன்பிறகு கோரக்பூர் ரயில் நிலையத்தில் இரண்டு வந்தே பாரத் ரயில்களை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். இதன்படி கோரக்பூர்- லக்னோ, ஜோத்பூர்- அகமதாபாத் இடையே வந்தே பாரத் ரயில் சேவைகள் தொடங்கப்பட்டு உள்ளன. மேலும் கோரக்பூர் ரயில் நிலையத்தில் ரூ.500 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
இதன்பிறகு தனது தொகுதியான வாரணாசிக்கு பிரதமர் மோடி சென்றார். அங்கு அவர் ரூ.12,100 கோடி மதிப்பில் பல்வேறு திட்டங்களைத் தொடங்கிவைத்தும் பல திட்டங்களுக்கு அடிக்கல்லும் நாட்டினார்.
0 Comments