கடந்த 15 ஆண்டுகளில் வறுமையிலிருந்து 41.5 கோடி பேர் மீட்பு - இந்தியாவுக்கு ஐநா பாராட்டு / 41.5 crore people lifted out of poverty in last 15 years - UN praises India
உலகளாவிய பல பரிமாண வறுமைக் குறியீட்டின் சமீபத்திய புதுப்பிப்பை ஐக்கிய நாடுகள் சபை நேற்று வெளியிட்டது. இதில் இந்தியா உட்பட 25 நாடுகள் தங்களது உலகளாவிய உலகளாவிய வறுமை குறியீட்டு மதிப்புகளை 15 ஆண்டுகளில் பாதியாக குறைத்து, விரைவான முன்னேற்றத்தை நோக்கி பயணிப்பதாக ஐநா பாராட்டி உள்ளது.
ஐநாவின் புதிய புள்ளிவிவரங்களின்படி, கடந்த 2005-06ம் ஆண்டிலிருந்து 2020-21ம் ஆண்டு வரை 41.5 கோடி மக்கள் வறுமையிலிருந்து வெளியேறி உள்ளனர்.
2005-06ம் ஆண்டில் இந்தியாவில் 64.5 கோடி பல்வேறு பிரிவின் கீழ் வறுமையில் இருந்த நிலையில், 2015-16ல் இந்த எண்ணிக்கை 37 கோடியாக குறைக்கப்பட்டது. 2019-21ல் இது 23 கோடியாக சரிந்துள்ளது.
2005-06ம் ஆண்டில் நாட்டின் மொத்த மக்கள்தொகையில் 55.1 சதவீதம் பேர் வறுமையில் இருந்த நிலையில் 2020-21ல் 16.4 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
மேலும், ஊட்டச்சத்து கிடைக்காத ஏழைகள் எண்ணிக்கை 2005-06ல் 44.3 சதவீதத்தில் இருந்து தற்போது 11.8 சதவீதமாக குறைந்துள்ளது. குழந்தை இறப்பு 4.5 சதவீதத்தில் இருநச்து 1.5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
சமையல் எரிபொருள் கிடைக்கப் பெறாதோர் எண்ணிக்கை 52.9 சதவீதத்தில் இருந்து 13.9 சதவீதமாகவும், சுகாதார வசதிகள் கிடைக்கப் பெறாதோர் எண்ணிக்கை 5.4 சதவீதத்தில் இருந்து 11.3 சதவீதமாகவும் குறைக்கப்பட்டுள்ளது.
சுத்தமான குடிநீர் கிடைக்கப் பெறாதவர்கள் எண்ணிக்கை 16.4 சதவீதத்தில் இருந்து 2.7 சதவீதமாகவும், மின்சார வசதி கிடைக்கப் பெறாதோர் எண்ணிக்கை 29 சதவீதத்தில் இருந்து 2.1 சதவீதமாகவும், வீட்டுவசதி கிடைக்கப் பெறாதோர் எண்ணிக்கை 44.9 சதவீதத்திலிருந்து 13.6 சதவீதமாகவும் குறைந்துள்ளது.
வரும் 2030ம் ஆண்டுக்குள் வறுமை ஒழிப்பு, சராசரி வருமான, குழந்தைகளுக்கு அடிப்படை கல்வி, பாலின சமத்துவம் போன்றவற்றில் நிர்ணயிக்கப்பட்டுள்ள வளர்ச்சி இலக்குகளை எட்டுவதில் சிக்கல் இருப்பதாக ஐநா தெரிவித்துள்ளது.
காரணம், 2030ம் ஆண்டில் உலகளவில் 57.5 கோடி கடுமையான வறுமையில் தொடர்ந்து இருப்பார்கள் என்றும், 8.4 கோடி குழந்தைகள் பள்ளி செல்லா நிலையில் நீடிப்பார்கள் என்றும் ஐநா மதிப்பிட்டுள்ளது. பாலின சமத்துவம் அடைய இன்னும் 268 ஆண்டுகள் ஆகும் என்றும் கூறி உள்ளது.
0 Comments