Recent Post

6/recent/ticker-posts

ஜூனியர் துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு 2-வது இடம் / 2nd position for India in Junior Shooting

  • கொரியாவில் உள்ள சாங்வான் நகரில் ஜூனியர் உலக சாம்பியன்ஷிப் துப்பாக்கி சுடுதல் போட்டி நடைபெற்று வந்தது. இதன் கடைசி நாளான ஆடவருக்கான 50 மீட்டர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் கமல்ஜீத் 544 புள்ளிகள் குவித்து தங்கப் பதக்கம் வென்றார். 
  • உஸ்பெகிஸ்தானின் வெனியமின் நிகிடின் 542 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கமும், கொரியாவின் கிம் தமின் 541 புள்ளிகளுடன் வெண்கலப் பதக்கமும் பெற்றனர்.
  • 50 மீட்டர் பிஸ்டல் ஆடவருக்கான அணிகள் பிரிவில் கமல்ஜீத், அன்கைத் தோமர்,சந்தீப் பிஷ்னோய் ஆகியோரை உள்ளடக்கிய இந்திய அணி 1,617 புள்ளிகள் குவித்து தங்கப் பதக்கம் வென்றது.
  • உஸ்பெகிஸ் தான் அணி 1,613 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கமும், கொரியா அணி 1,600 புள்ளிகளுடன் வெண்கலப் பதக்கமும் பெற்றன. மகளிருக்கான 50 மீட்டர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் டியானா 519 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
  • இந்த தொடரை இந்திய அணி 6 தங்கம், 6 வெள்ளி, 5 வெண்கலம் என 17 பதக்கங்கள் பெற்று 2-வது இடத்துடன் நிறைவு செய்தது. சீனா 12 தங்கம் உட்பட 28 பதக்கங்கள் பெற்று முதலிடம் பிடித்தது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel