4 ஆண்டுகளுக்கு பிறகு ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி, தாய்லாந்த் தலைநகர் பாங்காக்கில் நடைபெற்று வருகிறது. கடந்த புதன்கிழமை தொடங்கிய இப்போட்டியின் 2 ஆம் நாளன்று மட்டும் இந்திய அணிக்கு 3 தங்கம் பதக்கம் கிடைத்துள்ளது.
மகளிருக்கான 100 மீட்டர் தடை தாண்டும் ஒட்டத்தில் இந்திய வீராங்கனை ஜோதியார்ராஜீ 13 புள்ளி 9 நொடிகளில் இலக்கை கடந்து தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார். இதன் மூலம் ஆசிய தடகள சாம்பியன்ஷிப்பில் 100 மீட்டர் பந்தயத்தில் முதன் முறையாக இந்தியாவிற்கு தங்கம் கிட்டியுள்ளது.
இதே போன்று ஆடவருக்கான 1,500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில், இந்திய வீரர் அஜய்குமார் சரோஜ் தங்கம் வென்று அசத்தினார். ஆடவருக்கான மும்முனைப் போட்டியில் இந்திய வீரர் அப்துல்லா அபூபக்கர் தங்கம் வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்தார்.
ஐஸ்வர்யா கைலாஷ் மிஸ்ரா பெண்களுக்கான 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெண்கலம் வென்றுள்ளார். தேஜாஸ்வின் சங்கர் ஒரு வெண்கலம் வென்றுள்ளார்.
மொத்தம் 6 பதக்கங்களுடன் தற்போது இந்தியா பதக்க பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது. சீனா 3 தங்கம், 3 வெள்ளி மற்றும் 1 வெண்கலத்துடன் இரண்டாவது இடத்திலும், ஜப்பான் 7 தங்கம், 8 வெள்ளி மற்றும் 3 வெண்கலத்துடன் முதல் இடத்திலும் உள்ளது.
0 Comments