ஜூன் மாதத்திற்கான நாட்டின் சில்லறை பணவீக்கம் தொடர்பான புள்ளி விவரங்களை தேசிய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டது. இதில், நுகர்வோர் விலை குறியீடு (சிபிஐ) அடிப்படையிலான சில்லறை பணவீக்கம் 4.81 சதவீதமாக குறிப்பிடப்பட்டுள்ளது.
3 மாதத்திற்குப் பிறகு மீண்டும் பணவீக்கம் அதிகரித்துள்ளது. கடந்த மார்ச் மாதம் சில்லறை பணவீக்கம் 5.66 சதவீதமாகவும், கடந்த மே மாதம் 4.31 சதவீதமாகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.
கனமழையால் நாடு முழுவதும் உணவு தானியங்கள் மற்றும் பருப்பு வகைகளின் விலை கடுமையாக உயர்ந்ததால் சில்லறை பணவீக்கம் அதிகரித்துள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜூன் மாதத்தில் உணவு பணவீக்கம் 4.49 சதவீதமாக இருந்தது. இதுவே மே மாதத்தில் 2.96 சதவீதமாக இருந்தது. கிராமப்புறங்களில் பணவீக்கம் 4.72 சதவீதமாகவும், நகர்ப்புறங்களில் 4.96 சதவீதமாகவும் இருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், உணவுப் பணவீக்கம் கிராமப்புறங்களில் தேசிய சராசரியை விட சற்றே அதிகமாக இருந்தது.
ENGLISH
The Office for National Statistics has released data on the country's retail inflation for the month of June. In this, consumer price index (CPI)-based retail inflation was noted at 4.81 percent.
Inflation increased again after 3 months. It is noteworthy that retail inflation was 5.66 percent in March and 4.31 percent in May.
According to the government, the price of food grains and pulses has gone up sharply across the country due to heavy rains, which has led to an increase in retail inflation.
Food inflation stood at 4.49 percent in June. This was 2.96 percent in May. Statistics show that inflation in rural areas is 4.72 percent and in urban areas it is 4.96 percent.
However, food inflation was slightly higher than the national average in rural areas.
0 Comments