Recent Post

6/recent/ticker-posts

குஜராத்தின் காந்திநகரில் செமிகான்இந்தியா 2023-ஐ பிரதமர் தொடங்கி வைத்தார் / Prime Minister inaugurated SemiconIndia 2023 in Gandhinagar, Gujarat

  • குஜராத் மாநிலம் காந்திநகரில் உள்ள மகாத்மா மந்திரில் செமிகான் இந்தியா 2023-ஐ பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார்.
  • குஜராத் முதலமைச்சர் திரு பூபேந்திர படேல், மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ், மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் திரு ராஜீவ் சந்திரசேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
  • இந்த மாநாட்டின் கருப்பொருள் 'இந்தியாவின் குறைகடத்தி சுற்றுச்சூழல் அமைப்பை ஊக்கப்படுத்துதல்' என்பதாகும். தொழில்துறை, கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களைச் சேர்ந்த உலகளாவிய தலைவர்களை ஒன்றிணைப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது. 
  • குறைகடத்தி வடிவமைப்பு, உற்பத்தி மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டிற்கான உலகளாவிய மையமாக இந்தியாவை மாற்றுவதை நோக்கமாகக் கொண்ட இந்தியாவின் குறைகடத்தி உத்தி மற்றும் கொள்கையை இது வெளிப்படுத்துகிறது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel