Recent Post

6/recent/ticker-posts

2023ம் ஆண்டிற்கான விம்பிள்டன் சாம்பியன்ஷிப் போட்டி / WIMBLEDON TENNIS GRANDSLAM 2023

  • 2023ம் ஆண்டிற்கான விம்பிள்டன் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதி நாள் இன்று. ஜூலை மாதம் மூன்றாம் தேதியன்று தொடங்கி 14 நாட்களாக நடைபெறும் சாம்பியன்ஷிப் போட்டி, இன்றுடன் முடிவடைந்தது. 
  • விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரின் ஆடவர் இரட்டையர் பிரிவில், பிரிட்டனின் ஸ்கூப்ஸ்கி, நெதர்லாந்தின் கூல்காஃப் ஜோடி சாம்பியன் பட்டம் வென்றனர். 
  • ஆடவர் இரட்டையர் பிரிவு இறுதிப்போட்டியில் அர்ஜென்டினாவின் செபலோஸ், ஸ்பெயினின் மார்செல் ஜோடியுடன் கூல்காஃப்-ஸ்கூப்ஸ்கி ஜோடி மோதியது. இதில், கூல்காஃப்-ஸ்கூப்ஸ்கி ஜோடி 6க்கு 4, 6க்கு 4 என்ற செட் கணக்கில் வென்று, விம்பிள்டன் ஆடவர் இரட்டையர் பிரிவில் பட்டம் வென்றனர்.
  • 2023ம் ஆண்டிற்கான விம்பிள்டன் போட்டித்தொடரில், மகளிர் ஒற்றையர் பிரிவில், ஆன்ஸ் ஜபியூரை நேர் செட்களில் தோற்கடித்து மார்கெட்டா வொன்ட்ரோசோவா பட்டத்தை வென்றார். 
  • இதன் மூலம், அவர் தரவரிசையில் குறைந்த மற்றும் முதல் தரவரிசை பெறாத போதிலும், சாம்பியன்ஷிப் பட்ட வென்ற முதல் வீராங்கனை ஆனார்.
  • செக் குடியரசைச் சேந்த 24 வயதான வோன்ட்ரூசோவா 6-4, 6-4 என்ற செட் கணக்கில் ஜபியூரை தோற்கடித்து தனது முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றார். 
  • வொன்ட்ரூசோவாவின் உலக தரவரிசை 42 ஆகும், மேலும் விம்பிள்டனில் இறுதிப் போட்டியில் விளையாடிய முதல் தரவரிசையில் இல்லாத முதல் வீராங்கனை என்ற பெருமையையும் பெற்றார்.

2023ம் ஆண்டிற்கான விம்பிள்டன் சாம்பியன்ஷிப் போட்டி - ஆடவர் ஒற்றையர் பிரிவு சாம்பியன் பட்டத்தை முதல் முறையாக ஸ்பெயினின் கார்லஸ் அல்காரஸ் வென்று சாதனை

  • லண்டனில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் 36வயதான ஜோகோவிச்சை, 20 வயதான அல்காரஸ் எதிர்கொண்டார். பிரபரப்பான இந்த ஆட்டத்தில் ஜோகோவிச், முதல் செட்டை 6க்கு1 என்ற செட்டில் கைப்பற்றினார்.
  • 2வது செட்டை அல்காரஸ் 7க்கு6 என்று கைப்பற்றிய நிலையில், 3வது செட்டை 6க்கு 1 என்று எளிதில் வென்றார்.
  • எனினும் ஜோகோவிச் தன்னுடைய அனுபவத்தையும், சக்தியையும் திரட்டி 4வது செட்டில் 6க்கு3 என்ற கணக்கில் தனதாக்கினார். இதனால் சாம்பியனை தீர்மானிக்கும் கடைசி செட் வரை ஆட்டம் சென்றது. 
  • பரபரப்பான இந்த ஆட்டத்தில் கடைசி செட்டை 6க்கு4 என்ற கணக்கில் கார்லோஸ் கைப்பற்றினார். 4 மணி நேரம் 42 நிமிடம் நீடித்த இந்தப் போட்டியில் கார்லோஸ் அல்காரஸ் 1க்கு6, 7க்கு6,6க்கு1,3க்கு6,6க்கு4 என்ற கணக்கில் வென்று முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றார்.
  • இதன் மூலம் தொடர்ந்து 4 முறை விம்பிள்டன் பட்டத்தை வென்ற ஜோகோவிச்சின் ஆதிக்கம் முடிவுக்கு வந்தது. இதன் மூலம் வெற்றி பெற்ற ஆல்காரஸ்க்கு இந்திய ரூபாய் மதிப்பில் 25 கோடியே 25 லட்சம் ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்பட்டது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel