எம். சின்னசாமி ஸ்டேடியத்தில் கடந்த 12ம் தேதி தொடங்கி நடந்து வந்த இப்போட்டியின் முதல் இன்னிங்சில் தென் மண்டலம் 213 ரன் ரன் எடுத்த நிலையில், மேற்கு மண்டலம் 146 ரன்னுக்கு சுருண்டது. 67 ரன் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை விளையாடிய தென் மண்டலம் 230 ரன் குவித்து ஆல் அவுட்டானது.
அடுத்து 298 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மேற்கு மண்டலம், 84.2 ஓவரில் 222 ரன் எடுத்து அனைத்து விக்கெட்டையும் பறிகொடுத்தது.
75 ரன் வித்தியாசத்தில் வென்ற தென் மண்டல அணி துலீப் கோப்பையை கைப்பற்றி அசத்தியது. ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதுகளை வித்வத் கவெரப்பா தட்டிச் சென்றார்.
0 Comments