Recent Post

6/recent/ticker-posts

24-வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டித் தொடர் / 24th ASIAN ATHELETIC CHAMPIONSHIP 2023

  • பாங்காக்கில் கடந்த ஜூலை 12 ஆம் தேதி 24-வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டித் தொடர் தொடங்கியது. இதில், ஓட்டப் பந்தயம், நீளம் தாண்டுதல், ஹெப்டத்லான், கலப்பு தொடர் ஓட்டம், உயரம் தாண்டுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இந்தியா சார்பில் 28 வீரர்கள், 26 வீராங்கனைகள் என மொத்தம் 54 பேர் பங்கேற்றனர்.
  • ஆண்களுக்கான உயரம் தாண்டுதல் போட்டியில் இந்திய வீரர் சர்வேஷ் குஷாரே இரண்டாம் இடம் பெற்று வெள்ளிப்பதக்கம் வென்றார். 
  • ஆண்களுக்கான 400 மீ தடை ஓட்டத்தில் இந்தியா சார்பில் பங்கேற்ற சந்தோஷ் 49.09 வினாடி நேரத்தில் வந்து மூன்றாவது இடம் பெற்று வெண்கலப் பதக்கல் வென்றுள்ளார்.
  • 200 மீட்டர் ஓட்டத்தில் இந்திய வீராங்கனை ஜோதி யர்ராஜி வெள்ளிப் பதக்கம் வென்றார். வெள்ளிப்பதக்கம் வென்றதன் மூலம் ஜோதி யா்ராஜி இரண்டு பதக்கங்களை வென்றுள்ளார். 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் ஏற்கனவே தங்கம் வென்றிருந்தார்.
  • இந்திய வீராங்கனை அபா கதுபா பெண்களுக்கான குண்டு எறிதலில் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். 18.06 மீட்டர் தூரத்துக்கு குண்டு எறிந்த அபா கதுபா தேசிய சாதனையை சமன் செய்தார்.
  • இந்நிலையில் ஆசிய தடகள சாம்பியன்ஷிப் தொடர் இன்று நிறைவடைந்தது. இந்த தொடரில் 6 தங்கப் பதக்கம் உள்பட மொத்தம் 27 பதக்கங்களை இந்திய வீரர், வீராங்கனைகள் வென்று சாதனை படைத்துள்ளனர். 
  • இதன்படி 6 தங்கம், 12 வெள்ளி, 9 வெண்கலப் பதக்கங்களை வென்று இந்தியா பதக்கப்பட்டியலில் 3-வது இடத்தைப் பிடித்துள்ளது. பதக்கப்பட்டியலில் ஜப்பான் முதலிடத்தையும், சீனா 2-வது இடத்தையும் பிடித்துள்ளன.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel