ஸ்ரீஹரிகோட்டாவிலுள்ள ராக்கெட் ஏவுதளத்திலிருந்து ஜூலை 30 காலை 6:30 மணியளவில் இஸ்ரோவின் பி.ஸ்.எல்.வி சி56 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
சிங்கப்பூரின் DS-SAR புவி கண்காணிப்பு செயற்கை கோளை ராக்கெட் சுமந்து சென்றது. இது தவிர மேலும் 7 செயற்கை கோள்களும் ராக்கெட் மூலம் செலுத்தப்பட்டன.
ராக்கெட்டானது பூமியிலிருந்து 535 கி.மீ., உயரத்தில் பூமத்திய ரேகை சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.பூமியின் மேற்பரப்பினை ஆராயவும் தட்ப வெப்ப மாற்றங்களை ஆராயவும் ராக்கெட் பயன்படும்.
0 Comments