Recent Post

6/recent/ticker-posts

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.1சதவீதமாக இருக்கும் - ஐஎம்எப் கணிப்பு / India's economic growth will be 6.1 percent - IMF estimate

  • உலகின் பல்வேறு நாடுகளுக்கும் கடன் வழங்கும் நிறுவனம் தான் ஐஎம்எப். அதாவது சர்வதே நாணய நிதியம் என்று தமிழில் அழைக்கப்படுகிறது. இந்த ஐஎம்எப் அடிக்கடி பல்வேறு நாடுகளை ஆய்வு செய்து பொருளாரா நிலைகள் குறித்து ஆய்வறிக்கைகளை வெளியிட்டு வருகிறது.
  • ஒரு நாட்டின் வளர்ச்சி என்பது அந்நாட்டின் உள்நாட்டு உற்பத்தியை அடிப்படையாக கொண்டது. உள்நாட்டு உற்பத்தி எந்த நாடுகளில் எப்படி இருக்கிறது. வரும் காலத்தில் எப்படி இருக்கும் என்பது குறித்து பல்வேறு தரவுகளை ஆய்வு செய்து அறிக்கை வெளியிடுகிறது. 
  • இதன் அடிப்படையிலேயே கடன்கள் வழங்குவதையும் அந்நிறுவனம் செய்து வருகிறது.பல்வேறு நாடுகளும் ஐஎம்எப்பின் ஆய்வை உன்னிப்பாக கவனிக்கும்.
  • அந்த வகையில் புதிய ஆய்வின் முடிவினை ஐஎம்எப் வெளியிட்டுள்ளது. அதன்படி 2023 ஆண்டில் உலகத்தின் வளர்ச்சி சற்று மேம்பட்டுள்ளதாக கூறியுள்ளது. 
  • இதற்கு முதல் காலாண்டில் எடுக்கப்பட்ட பல அதிரடியான (சிக்கன) பொருளாதார நடவடிக்கைகள் காரணம் என்று கூறியுள்ளது. எனினும் இனிவரும் காலங்களில் பல்வேறு சவால்கள் இருக்கும் என்றும் எச்சரித்துள்ளது.
  • ஐபிஎப் கணிப்பின் படி 2023 ஆம் ஆண்டில் உலக அளவில் ஜிடிபி வளர்ச்சி 3.0% என்று கணித்துள்ளது. ஏப்ரல் மாதம் அறிவித்ததை விட 0.2 சதவீதம் அதிகமாக இருக்கும் என்றும் கணித்துள்ளது. எனினும் 2024ம் ஆண்டில் 3.0% என்ற அளவிலேயே இருக்கும் என்றும் கணித்துள்ளது
  • இந்தியா குறித்து ஐஎம்எப் கணிப்புகளை பார்க்கும் போது. இந்த நிதியாண்டில் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 6.1 சதவீதம் ஆக இருக்கும் என்று கூறியுள்ளது. இது ஏப்ரல் மாதத்தில் கணித்ததை விட 0.2 சதவீதம் அதிகமாகும். 
  • 2022 ஆம் ஆண்டின் நான்காவது காலாண்டில் எதிர்பார்த்ததை விட வலுவான வளர்ச்சி இந்தியாவில் இருந்தது. உள்நாட்டு உற்பத்தி அதிகரித்ததால் கடந்த ஆண்டு வளர்ச்சி விகிதம் அதிகரித்து இருந்தது.
  • ஆனால் இந்த ஆண்டு ரிசர்வ் வங்கி இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.5% ஆக இருக்கும் என்று கணித்திருந்த நிலையில், அதை விட குறைவாக, அதாவது 6.1 சதவீதம் என்று இந்தியாவின் பொருளாதாரம் குறித்து ஐஎம்எப் கணித்துள்ளது. 
  • வரும் மாதங்களில் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்படும் என்றும் கூறியுள்ளது. 2022ல் இந்தியாவின் வளர்ச்சி 7.2% ஆக இருந்தது. தற்போது 6.1 சதவீதமாக சரிந்துள்ளது.
  • இந்தியாவை பற்றி மட்டுமல்ல.. அமெரிக்கா குறித்தும் ஐஎம்எப் கணித்துள்ளது. அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சி ஏப்ரல் மாதத்தில் இருந்ததைவிட 0.2 சதவீத அதிகமாக இருக்கும் என ஐஎம்எப் கூறியுள்ளது. 
  • அதாவது அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 1.8 சதவீதமாக இருக்கும் என்று கூறியுள்ளது. சீனாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 5.2 சதவீதமாகவே இருக்கும் என்று கூறியுள்ளது.
  • உலக நாடுகள் பல பணவீக்கத்தால் பாதிக்ககப்படும் என்றும், மக்களின் வாங்கும் சக்தியை இது பாதிக்கும் என்றும். அதிக கடன் வாங்கும் நிலை, வட்டி விகிதங்கள் அதிகரிப்பு போன்ற பிரச்சனைகள் இருக்கும் என்றும் ஐஎம்எப் கூறியுள்ளது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel