மாநிலப் பேரிடர் நிவாரண நிதியின் கீழ் 19 மாநிலங்களுக்கு 6,194.40 கோடி ரூபாய் வழங்க மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஒப்புதல் அளித்துள்ளார்.
ஒப்புதல் அளிக்கப்பட்ட தொகையில், தமிழகம், ஆந்திரா, கேரளா, பீஹார், ஹரியானா, இமாச்சல பிரதேசம், கோவா, ஒடிசா, மஹாராஷ்டிரா, பஞ்சாப், வடகிழக்கு மாநிலங்களான அருணாச்சல பிரதேசம், அசாம், மணிப்பூர், மேகாலயா, திரிபுரா ஆகிய 15 மாநிலங்களுக்கு, 2023 - 24ம் ஆண்டுக்கான நிதியாக 4,984.80 கோடி ரூபாய் வழங்கப்படும்.
வடகிழக்கு மாநிலமான மேகாலயா மற்றும் சத்தீஸ்கர், தெலுங்கானா, உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு, 2022 - 23ம் ஆண்டுக்காக 1,209.60 கோடி ரூபாய் வழங்கப்படுகிறது.
இந்த நிதி நடப்பு பருவமழைக் காலத்தில் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ள மாநிலங்களுக்கு உதவியாக இருக்கும்.
பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான மத்திய அரசு, 2023 - -24ம் ஆண்டில், ஒன்பது மாநிலங்களுக்கு, மாநில நிவாரண நிதிக்கான மத்திய அரசின் பங்காக 3,649.40 கோடி ரூபாயை வழங்க ஏற்கனவே ஒப்புதல் அளித்துள்ளது.
0 Comments